போர்க்­கா­லப்­ப­கு­தி­யில் பொது­மக்­க­ளால் கைவி­டப்­பட்டு வாகனங்கள் அகற்றல்!

286 0

போர்க்­கா­லப்­ப­கு­தி­யில் பொது­மக்­க­ளால் கைவி­டப்­பட்டு முல்­லைத்­தீவு – ஒட்­டு­சுட்­டான் ஆறு­மு­கம் வித்­தி­யா­ல­ய­ வ­ளா­கத்­தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த வாக­னங்­களை அங்­கி­ருந்து அகற்­றும் நட­வ­டிக்­கை­யில் பொலி­ஸார், இரா­ணு­வத்­தி­னர் ஈடு­பட்­டுள்­ள­னர்.

மூன்று நாள்­க­ளுள் அந்த வாக­னங்­கள் அங்­கி­ருந்து அகற்­றப்­ப­டும் எனப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

போர்க் கா­லத்தில் கைவி­டப்­பட்ட வாக­னங்­கள் முல்­லைத்­தீவு – ஒட்­டு­சுட்­டான் ஆறு­மு­கம் வித்­தி­யா­ல­ய­ வ­ளா­கத்­தில் நிறுத்திவைக்­கப்­பட்­டன.

போர் முடி­வ­டைந்து 8 ஆண்­டு­க­ளா­கி­யும் அவை மீட்­கப்­ப­டாத நிலை­யில் தற்­போது உருக்­கு­லைந்து காணப்­படுகின்றன.

அவற்­றைச் சூழ புதர்­கள் வளர்ந்­தன. இந்­தப் புதர்­கள் பாட­சா­லை­யில் கல்­வி­கற்­கும் மாண­வர்­க­ளுக்குப் பெரும் அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­தி­ன.

மாண­வர்­கள் நாளாந்­தம் பயத்­து­டனேயே தமது கற்­றல், விளை­யாட்டு நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­டு­வந்­த­னர்.

அந்த வாக­னங்­க­ளைப் பாது­காக்கப் பாட­சாலை வளா­கத்­தில் இரா­ணு­வத்­தி­னர் காவ­லுக்கு வைக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

இது தொடர்­பாகப் பாட­சாலை நிர்­வா­கம், மாவட்டச் செய­லா­ள­ருக்­கும், வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்    து.ரவி­க­ர­னுக்­கும் தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

2015ஆம் ஆண்டு மாவட்டச் செய­லா­ள­ரால் முல்­லைத்­தீ­வுப் பாது­காப்­புப்­ப­டைத் தலை­மை­ய­கத்­துக்கு குறித்த விட­யம் கடி­தம் மூலம் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது.

ரவி­க­ரன் கடந்த 2016ஆம் ஆண்டு இது தொடர்­பில் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­னார்.

முத­ல­மைச்­ச­ரா­லும் முல்­லைத்­தீவு பாது­காப்­புப்­படைத் தலை­மை­ய­கத்­துக்குக் கடி­தம் மூலம் அறி­வித்­தல் வழங்­கப்­பட்­டது.

இந்த அறி­வித்­தல்­க­ளால் தீர்­வு­கள் ஏதும் கிடைக்­காத நிலை­யில், ரவி­க­ரன் மீண்­டும் முத­ல­ மைச்­ச­ருக்கு கடந்த செப்ரெம்­பர் மாதம் கடி­தம் அனுப்­பி­னார்.

இதன் படி நேற்று முன்­தி­னம் முதல் குறித்த பாட­சாலை வளா­கத்­தில் உள்ள வாகனங்­கள் படை­யி­ன­ரா­லும் பொலி­ஸா­ரா­லும் அங்­கி­ருந்து அகற்­றப்­ப­டுகின்றன எனத் தெரி­விக்­கப்­பட்­டது. இந்த விட­யத்தை ரவி­க­ரன் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

Leave a comment