அனிகாவின் சகோதரருக்கு பொலிஸ் பாதுகாப்பு

413 0

பிணைமுறி விவகாரத்தில், முன்னாள் நிதியமைச்சரான ரவி கருணாநாயக்கவின் நெருங்கிய உறவினர்களால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் அனிகா விஜயசூரியவின் சகோதரருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவால் விசாரணை நடத்தப்பட்டு வரும் பிணைமுறி விவகாரத்தில், தனக்குச் சொந்தமான ஒரு வீட்டை அர்ஜூன் அலோஷியஸுக்கு அனிகா விஜயசூரிய வாடகைக்குக் கொடுத்திருந்தார்.

அர்ஜூன் அலோஷியஸ் அந்த வீட்டை ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கியிருந்ததுடன், அதற்கான வாடகையையும் அர்ஜூனே செலுத்தியதாகக் கூறப்பட்டது.

சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரத்தில், ஜனாதிபதி ஆணைக்குழு முன் விளக்கமளித்த அனிகா விஜயசூரிய, தொடர்ச்சியான பயமுறுத்தல்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் வசிக்கும் அவரது சகோதரருக்கே பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment