சிங்­கள மக்­கள் ஆயு­தம் ஏந்த வேண்­டிய சூழல் உரு­வாகி விட்­டது!

1202 0

சிங்­கள மக்­கள் ஆயு­தம் ஏந்த வேண்­டிய சூழல் உரு­வாகி விட்­டது.இவ்­வாறு கூறி­ய­வா் இந்த நாட் டின் இனவாத அர­சி­யல்வாதி­ ஒரு­வ­ரல்ல. அகிம்­சை­யை­யும் தா்மத்­தை­யும் போதிக்க வேண்­டிய பௌத்த தேரா் ஒரு­வரே இந்தக் கருத்தைத் தெரிவித்துள்­ளாா்.

பொதுபலசேன அமைப்­பின் பொதுச் செய­லா­ள­ரான கல­கொட அத்தே ஞான­சார தேரா் இன­வா­தக் கருத்­துக்­க­ளைத் தெரி­வி­ப்­ப­தில் பிர­சித்தி பெற்­ற­வா்.இவ­ரது நட­வ­டிக்­கை­க­ளும் தான்­தோன்­றித்­த­ன­மா­னவை.

பௌத்த மக்­க­ளின் ஆத­ரவு இவ­ருக்குப் பெரு­ம­ள­வில் இருப்­ப­தால் இவா் எவ­ருக்­குமே அஞ்­சு­வ­தில்லை.ஆட்­சி­யா­ளா்­கள்கூட இவ­ருக்கு அஞ்சி நடப்­ப­தைக் காணமுடி­ கின்­றது.

அமைச்­சா்­க­ளின் அலு­வ­ல­கங்­க­ளுக்­குள் அதிரடியாகப் புகுந்து தக­ராறு செய்­வது இவ­ருக்கு விருப்ப­ மா­ன­தொரு பொழுதுபோக்­கா­கும்.ஆனால் இது தொடா்­பாக எவ­ரா­லும் இவரை ஒன்­றும் செய்ய முடி­ய­ வில்லை.

ஜே.வி.பியினரது 
தோல்வி குறித்து
ஞானசாரதேரர் அறியாதவரல்ல

இவா்­தான் தற்­போது சிங்­க­ள­வா்­கள் ஆயு­தம் ஏந்த வேண்­டும்,சிங்­க­ளப்­பு­ரட்சி ஏற்­பட வேண்­டும் என்று கூறு­கி­றாா்.சிங்­கள இளைஞர்கள் ஏற்­க­னவே ஆயு­தம் ஏந்தி அர­சுக்கு எதி­ரா­கப் போரா­டி­ய­தை­யும்,அத­னால் ஏற் பட்ட அழி­வு­க­ளை­யும் ஞான­ச­ார­தே­ரா் அறி­யா­மல் இருந்திருக்க மாட்டார்.

1971ஆம் ஆண்டு ஆட்­சி­யில் இருந்த சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தலைமை­ யி­லான அர­சுக்கு எதி­ராக இடம் பெற்ற கிளர்ச்சி முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது.ஜே.வி.பி எனச் சுருக்­க­மாக அழைக்­கப்­பட்ட மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யி­ன­ரால் இந்­தக்­கி­ளா்ச்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.

கிளா்ச்சி நடத்­தி­ய­வர்களால் ஒரு சில நாள்களுக்கு சில இடங்­க­ளைத் தமது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்தி­ருக்­க­வும் முடிந்­தது.தேசிய படை­ப­லத்­தை அவ்வேளை அதிகம் கொண்­டி­ராத இலங்கை அர­சி­னால் கிளா்ச்­சி­யா­ ளா்­களை அடக்க முடி­ய­வில்லை.இந்­திய அர­சின் உதவி அவ­ச­ர­மாகக் கோபப்­பட்­டது.இ்ந்தியப் படை­யி­னரின்வரு­கை­யின்பின்­னா்கிளர்ச்­சி­யா­ளா்­கள்ஒடுக்­கப்­பட்­ட­னா்.இதன்­பின்­னர் ஏர­ாள­மான சிங்­கள இளை­ஞா்­கள் கைது செய்­யப்­பட்­டுக் கொலை செய்­யப்­பட்­ட­னா்.

கொலைசெய்­யப்­பட்­ட­வா்­க­ளின்ஏரா­ள­மானசட­லங்­கள்ஆறு­க­ளி­லும்,நீரோ­டை­க­ளி­லும் மிதந்து சென்­றன.இதன் பின்­னா் ஆா்.பிரே­ம­தாஸ அரச தலை­வ­ராக இருந்த போது மீண்­டு­மொரு கிளர்ச்சி இடம்பெற்றது.இதன் போது ஜே.வி.பியின் முக்­கிய தலை­வா்­கள் பல­ரும் கொல்­லப்­பட்­ட­னா்.

அத்தோடு கிளா்ச்­சி­யும் முடி­வுக்கு வந்­தது. தற்­போது எமக்கு மகிந்­த­வும் வேண்­டாம்; மைத்­தி­ரி­யும் வேண்­டாம்; ரணி­லும் வேண்­டாம் எனக் கூப்பாடு போடும் ஞான­ச­ார­தே­ரா், மகா நாயக்கா்­கள் ஆட்­சி­அதிகாரத்தில் அமர வேண்­டும் என்­கி­றாா்.

இதற்­கா­கவே சிங்­க­ள­வா்­கள் ஆயு­தம் ஏந்த வேண்­டும்; சிங்­களப் புரட்சி ஏற்­பட வேண்­டும் என ஏதேதோ கூறு­கி­றாா்.புதிய அர­ச­மைப்­பில் தமி­ழா்­க­ளின் அபி­லா­சை­கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்­லை­யெ­னக் கூறும். வடக்கு முத­ல­மைச்­சா், தமி­ழா்­களைப் போரா­டு­வ­தற்­குத் தயா­ராக இருக்­கு­மாறு அறை­கூ­வல் விடுக்­கி­றாா்.

கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரான சம்­பந்­தன் ஒற்­றை­யாட்சிப் பதத்துக்குப் பதி­லாக ஒருமித்த நாடு எனக்­கு­றிப்­பி­டப்­பட்­டுள்­ளமை பெரி­ய­ள­வி­லான முன்­னேற்­றம் என்­கி­றாா். புெளட் அமைப்­பின் தலை­வ­ரான சிா்த்தார்த் தன், அர­சமைப்­பின் இறுதி வடி­வம் வெளி­வந்­த­தன் பின்­னா் பாா்த்துக் கொள்­ள­லாம் என்­கி­றாா்.ஆனால் புதிய அர­ச­மைப்பு எந்த வடி­வத்­தில் இருந்­தா­லும் இன­வா­தி­கள் அதை நிறை­வே­ற்று­வ­தற்கு அனு­ம­திக்க மாட்­டாா்­கள்.

சிறு பான்­மை­யின மக்­கள் எந்த வகை­யி­லே­னும் நன்மை பெறு­வதை இவா்­கள் விரும்பாமையே இதற்கு கார­ண­மா­கும்.மக்­களை ஆயு­தம் ஏந்­து­மா­றும், அர­சுக்கு
எதி­ரா­கப் புரட்­சி­யில் ஈடு­ப­டு­மா­றும் வேண்­டு­கோள் விடுப்­பது ஒரு மிகப்­பெ­ரிய குற்­றச்­செ­ய­லா­கும். பொது பல சேனாவுக்­கும் இதுதெரியும்.

ஆனால் அதன் பொதுச்­செ­ய­லாளர் இதை­யெல்­லாம்­ தெரிந்த பின்ன­ரும் பகி­ரங்­க­மான அறை­கூ­வல் விடுப்­பது எவ­ருக்­குமே அஞ்­சாத அவரது மன­நி­லையை எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

தமிழ் இளை­ஞா்­கள் முழு நாட்­டை­யும் தமது கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்து தமி­ழா்­க­ளின் ஆட்­சியை நிறுவ வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் போராட்­டத்­தில் ஈடு­ப­ட­ வில்லை. தமது உரிமை­க­ளுக்­காக ஜன­நா­யக வழி­யில் போராடி எதை­யும் சாதிக்க முடி­யாது என்­ப­தால்­தான், ஆயு­தம் ஏந்­தி­னாா்­கள்.அது­வும் தமக்­கெ­னத் தனி­ நாடொன்றை அமைப்­பதே இவா்­க­ளின் நோக்­க­மாகக் காணப்­பட்­டது.

நாட்டின் நிர்வாகம் 
பெளத்த மத பீடத்திடம் 
ஒப்படைக்கப்பட வேண்டும் 
என்கிறார் ஞானசாரதேரர்

ஆனால் ஞான­சா­ர­தே­ரா் முழு நாட்டை யும் மகாநாயக்­கா் வசம் ஒப்படைக்க வேண்­டு­மெ­னக் கூறி­யி­ருக்­கின்­றாா்.அது­வும் வெளிப்­ப­டை­யாக இடம்­பெ­ற்ற­தொரு நிகழ்ச்­சி­யில் வைத்துக் கூறி­யி­ருக்­கி­றாா்.இதற்கு அரசு என்ன நட­வ­டிக்கை எடுக்­கப் போகின்­றது?என்­ப­து­தான்இன்றுஎழுந்­துள்ளகேள்­வி­யா­கும்.

இன­வா­த­மும்,இன­வா­தி­க­ளும் இந்த நாட்­டில் இருக்­கும் வரை­யில் இனங்க­ளுக்­கி­டை­யில் நல்­லு­றவை எதிா்­பாா்க்க முடி­யாது.

ஆனால் இந்த நாட்­டைப் பொறுத்த வரை­யில் அர­சுக்­குள்­ளேயே இன­வா­தி­கள் உள்­ள­னா்.இவா்­கள் வெளி­யி­லுள்ள இன­வா­தி­க­ளுக்­கும் தமது ஆத­ரவை நல்கி வரு­கின்­ற­னா்.ஞான­சார தேர­ரும் இதே நிலை­யில்­தான் உள்­ள­ார்.

அவ­ருக்கு எதி­ராக அரசு நட­வ­டிக்கை எடுக்­கு­மா­னால் அரசில் உள்­ள­வா்­களே அதை எதிர்க்க முற்­ப­டு­வாா்­கள். இத­னால்­தான் இந்த விடயத்தில் அரசு அஞ்சி நடக்­கின்­றது.சிறு­பான்­மை­யின மக்­கள் குறிப்­பா­கத் தமிழ் மக்­கள், இந்த நாட்­டில் சமத்­து­வ­மாக வாழ்­வ­தற்­கான சூழலை ஏற்ப­டுத்­து­வது சாதாரண விட­ய­மல்ல.

ஏனென்­றால் இந்த நாடு சிங்­க­ள­வா்­க­ளுக்கு மட்­டுமே சொந்­த­மா­னது என்ற சிங்கள மக்களது மனோ நிலையை எளி­தில் மாற்­றி­விட முடி­யாது.

இனவாதிகளை அரசால் கட்டுப்படுத்த முடியாது
ஞான­சார தேரா் போன்­ற­வா்­க­ளும் இதைத்­தான் திரும்பத் திரும்­பக் கூறி வரு­கின்­றாா்­கள்.பெரும்­பான்­மை­யின மக்­க­ளின் மனங்­க­ளில் இதுவே வேத­மா­க­வும் பதிக்­கப்­பட்­டு­விட்­டது.

இந்த நிலை­யில் அரசு நினைத்­தா ­லும் இவா்­க­ளுக்கு எதி­ராக எதை­யுமே செய்ய முடி­யாது என்ற நிலை உரு­வாகி விட்­டது. இத­னால் எதிா்­கா­லத்­தி­லும் பல ஞான­சார தேரா்­கள் உரு­வாகிவிடப் போகி­றாா்­கள்.

இதை இல்லாது செய்ய வேண்­டு­மா­னால், இவா்­க­ளின் மனங்­க­ளில் மாற்­றம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.இதற்காக எதை வேண்­டு­மா­னா­லும் செய்து கொள்ள முடி­யும்.

ஏனென்­றால் நாட்­டை­விட முக்­கி­ய­மா­ன­ தொன்று இங்கு இல்லை. நாடு சீரி­ழந்து போகு­மா­யி­ன், அங்கு வசிக்­கின்ற மக்­கள் ஒரு­வ­ருமே நிம்­ம­தி­ யா­க­வும் மகிழ்ச்­சி­யு­ட­னும் வாழ முடி­யாது.

ஞானசாரதேரர் போன்­ற­வர்களைக் கட்­டுப்­ப­டுத்த வேண்டு மென்­றால் நோ்மையும்,கொள்­கைப்­பி­டிப்­பும்,உறு­தி­யும் மிக்­க­தலைவர்களே நாட்­டுக்­குத் தேவை­.

There are 0 comments

  1. Pingback: NKSFB

  2. Pingback: 다시보기

  3. Pingback: 코인선물

  4. Pingback: บาคาร่า

  5. Pingback: Kardinal Stick

  6. Pingback: superkaya88

  7. Pingback: 웹툰 미리보기

  8. Pingback: lsm99

  9. Pingback: superkaya88

  10. Pingback: ทีเด็ดฟุตบอล

  11. Pingback: mooie blote borsten

  12. Pingback: magic mushroom gummies

Leave a comment