அரசியல் தீர்வை குழப்ப சதி –சாந்தி சிறிஸ்கந்தராஜா

2224 439

தென்பகுதியில் பிரபாகரனது ஆசை நிறைவேறிவிட்டது தமிழீழம் கிடைக்கப்போகிறது என பொய் பிரச்சாரம் செய்து  அரசியல் தீர்வை குழப்ப சதி இடம்பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா குற்றம் சாட்டியுள்ளார்

மல்லாவி பிரதேச வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகழ்த்துகையிலையே  இவ்வாறு தெரிவித்தார்

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

பிரபாகரனது ஆசை நிறைவேறிவிட்டது தமிழீழம் பிறக்கப்போகிறது என அங்கு பிரச்சாரம் செய்கிறார்கள் வடபகுதியிலுள்ள ஒரு சில சுயலாபம் கருதுகின்றவர்கள் இந்த அரசியல் யாப்பிலே எதுவிதமான தீர்வுமில்லை  எதுவிதமான முடிவுமில்லை முற்றுமுழுதாக தமிழ் மக்களை மோசம் செய்து விட்டது கூட்டமைப்பு என பிரச்சாரம் செய்கின்றார்கள் இவ்வாறாக இந்த மக்களை குழப்புகின்ற வகையிலே நடைபெறும் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும் புத்தியீவிகள் உண்மை எது சாத்தியமானது எது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

வெண்ணை திரண்டுவரும் போது தாழி உடைந்த கதையாக பல சம்பவங்களை நாங்கள் அறிவோம் இவ்வாறான இந்த சந்தர்ப்பத்தை நாம் தவறவிடாது எமது மக்களுக்கு ஒரு நின்மதியை ஒரு விடிவை தேடிக்குடுக்கின்ற  வகையில் அனைவரும் புத்திசாலித்தனமாக ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிகை விடுத்தார்

There are 439 comments

  1. Hey there, I think your site might be having browser compatibility issues. When I look at your blog in Opera, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping. I just wanted to give you a quick heads up! Other then that, amazing blog!

Leave a comment

Your email address will not be published.