சர்வதேச நெல் ஆய்வு நிறுவனத்தின் நடவடிக்கை அலுவலகம் இலங்கையில்

251 0

பிலிப்பைன்ஸில் தலைமையகத்தை கொண்டுள்ள சர்வதேச நெல் ஆய்வு நிறுவனத்தின் நடவடிக்கை அலுவலகம் ஒன்று இலங்கையில் அமைக்கப்படவுள்ளது.

பத்தலகொட நெல் ஆய்வு நிறுவனத்தில் இதனை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக சர்வதேச அரிசி ஆய்வு நிறுவனமும் இலங்கையிலுள்ள நெல் ஆய்வு நிறுவனத்திற்கும் இடையில் புரிந்து உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்காக அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கைக்கு தேவையான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்வதே இந்த சர்வதேச நெல் ஆய்வு நடவடிக்கை அலுவலகம் ஒன்றை இலங்கையில் அமைப்பதன் நோக்கமாகும்.

பொது சந்தை கட்டடத்தொகுதியை நவீனமயப்படுத்தல் மற்றும் முழு வசதிகளையும் கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபை, சம்பந்தப்பட்ட மாகாண நிறுவனங்களுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. இதற்காக மாநாகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை, நுகேகொட, மஹரகம, தெஹிவளை, கல்கிஸ்சை, மொரட்டுவ மற்றும் கட்டுபெத்த நகரங்களில் அமைந்துள்ள பொது வர்த்தக கட்டடத்தொகுதி இதன்கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment