இன்று ஜனா­தி­ப­தியை சந்­திக்­கி­றது யாழ்.பல்­கலை மாணவர் ஒன்­றியம்

379 0

அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதி­களின் கோரிக்­கை­களை உட­ன­டி­யாக நிறை வேற்றக் கோரி யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியம் இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடாத்­த­வுள்­ளது. இச் சந்­திப்பு காலை 11 மணிக்கு ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

வவு­னியா மேல் நீதி­மன்றில் இருந்து அநு­ரா­த­புரம் மேல் நீதி­மன்­றுக்கு மாற்­றப்­பட்ட தமது வழக்­கு­களை மீண்டும் வவு­னியா மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்ற வேண்டும் என கோரி அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உள்ள தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்ச்­சி­யாக 23 நாட்­களை கடந்தும் உண்­ணா­வி­ரத போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

இவர்­க­ளது உண்­னா­வி­ரத போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்து வடக்கில் ஹர்த்தால் இடம்­பெற்­றி­ருந்­த­துடன் போராட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

அதன் தொடர்ச்­சி­யாக உண்­ணா­வி­ரத்தில் ஈடு­பட்­டு­வரும் அர­சியல் கைதி­களின் கோரிக்­கையை உட­ன­டி­யாக நிறை­வேற்­ற­மாறும் அது தொடர்­பாக ஜனா­தி­ப­தி­யுடன் சந்­திப்­ப­தற்கு சந்­தர்ப்­ப­மொன்றை ஏற்­ப­டுத்தி தரு­மாறும்   வட­மா­காண ஆளு­ந­ரிடம் கடந்த திங்­கட்­கி­ழமை பல்­க­லை­க­ழக மாணவர் ஒன்­றியம்   கோரிக்கை விடுத்­தது.

இத­னை­ய­டுத்து வட­மா­காண ஆளுநர் இன்­றைய தினம் அதற்­கான சந்­தர்ப்­பத்தை பெற்­று­கொ­டுத்­தி­ருந்தார். இத­ன­டிப்­ப­டையில் இன்று காலை 11 மணிக்கு ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இச் சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது.

சந்­திப்பு தொடர்­பாக யாழ்.பல்­க­லை­க­ழக அனைத்­து­பீட மாணவர் ஒன்­றிய தலைவர் கிருஸ்­ன­மேனன்  தெரி­விக்­கையில்

இன்­றைய ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில், உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதி­களின் கோரிக்­கை­களை உட­ன­டி­யாக நிறை­வேற்ற வேண்டும் என்­பது தொடர்­பிலும், வழக்கு விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்த வேண்டும் என்­பது  குறித்தும் வலி­யு­றுத்­துவோம்.

இவ்­வாறு நாம் முன்­வைக்கும் இக் கோரிக்­கைகள் தொடர்­பாக ஜனா­தி­பதி எமக்கு உட­ன­டி­யாக பதி­லொன்றை தர­வேண்டும் என்றும் வலி­யு­றுத்­த­வுள்ளோம்  என்றார்.

யாழ்.பல்­க­லை­க­ழ­கத்தின் ஒவ்வொரு பீடங்களினதும் மாணவ தலைவர்கள் , பெண் பிரதிநிதிகள் சார்பாக இருவர் ,  மாணவ ஆலோசகர்கள்  மற்றும் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதியொருவரின் சகோதரியான  பல்கலைகழக மாணவி கிருஷாந்தி ஆகியோர் ஜனாதிபதியுடனான  சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Leave a comment