கொலன்னாவை சாலமுல்ல பிரதேசத்திலிருந்து காணாமல் போய் பின்னர் காவற்துறையில் சரணடைந்த 19 வயது பெண் மற்றும் 15 வயதான யுவதியின் நண்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த 17 வயதான இளைஞனும் 19 வயதான ஒரு குழந்தையின் தாயும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வெல்லம்பிட்டிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சரணடைந்த 15 வயது யுவதியும் 14 வயது சிறுமியும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த குறித்த மூன்று பேரும் இன்று காவற்துறையில் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் காணாமல் போய் பின்னர் கம்பஹா காவற்துறையில் சரணடைந்த 14 வயது கொலன்னாவை பகுதியை சேர்ந்த சிறுமியை தடுத்து வைத்திருந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டிய காவற்துறையின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

