பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை இணக்க சபைக்கு மாற்றுமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் உதேஷ் ரணதுங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் முறைப்பாட்டாளரை அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பான வழக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டதை அடுத்து முறைப்பாட்டாளரான சந்தியா எனெலிகொடவுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக ஹோமாகம பொலிஸார் குறித்த வழக்கை பதிவுசெய்துள்ளனர்.
தண்டனை சட்டக்கோவை 346 மற்றும் 486 எனும் உறுப்புரைகளுக்கமைய ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

