சிறைக்கைதிகளின் உயிரோடு விளையாடுகின்ற செயற்பாடாக எதுவும் அமைந்துவிடக்கூடாது – ஸ்ரீநேசன்.

262 0

ஜனாதிபதி யாழ்பாணத்திற்கு வருவார் என்றோ வராமாட்டார் என்றோ எண்ணிய நிலையில் சிறைக்கைதிகள் தொடர்பான போராட்டதினை முன்னெடுத்திருக்கலாம் ஆனால் ஜனாதிபதி அந்த இடத்தில் இறங்கிவருகின்றபோது.

குறித்த ஆர்ப்பாட்ட காரர்கள் உணர்ச்சிவசப்படாமல் தங்களது கருத்துக்களை முன்வைத்திருக்க வேண்டும்.

அதுமாத்திரமின்றி ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது அதற்கு சம்மதம் தெரிவித்து பேச்சுவார்த்தைக்கு சென்று பேச்சவார்த்தையில் ஈடுபட்டிருக்க வேண்டும் இதுவே இன்றைய காலகட்டத்திற்கு உகந்ததாகும்.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

சிறைக் கைத்திகளின் விடுதலை தொடர்பில் புதன் கிழமை (18)  தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்….

சிறைக்கைதிகள் இன்று உண்ணாவிரம் இருக்கின்றனர் எங்களை நம்பியிருக்கின்ற சிறைக்கைதிகளின் உயிரோடு விளையாடுகின்ற செயற்பாடாக அமைந்துவிடக்கூடாது.

காரணம் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பேச்சவார்த்தை மூலம் தீர்வினை எட்டியிருக்கலாம் ஏன் நான் இதனைக்கூறுகின்றேன் என்றால் ஜனாதிபதி அவர்கள் தனக்கு தற்கொலை தாக்குதல் நடாத்தவந்த போராளியைக் கூட மன்னித்து விட்ட செய்தி எங்கள் மத்தியில் இருக்கின்றது.

இதனால் தான் கூறுகின்றேன் இந்த இடத்தில் நாங்கள் பேச்சுவார்தைமூலம் எமது கேட்டித்தனத்தால் குறித்த விடயத்தில் வெற்றிகண்டிருக்கலாம்.

இதiனை விடுத்து இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் ஏதாவது உயிரிழப்புக்கள் வந்தால் அதனை வைத்துக் கொண்டு நாங்கள் அரசியல் செய்யலாம் என்று எண்ணக்கூடாது.

உதாரணமாக உண்ணாவிரதம் இருந்தவர் இறந்துவிட்டார் எவரும் அவர்களை கருத்தில் எடுக்கவில்லை நாங்களே களத்தில் நின்றோம். என்று அரசியல் செய்வதற்கு பயன்படுத்தக் கூடாது.

குறித்த விடயம் தொடர்பாக கஜந்திரகுமார், சுரேஸ்பிறேமசந்திரனின் கருத்திற்கும் சிவாஜிலிங்கத்தின் கருத்திற்கும் பல வித்தியாசங்கள் இருந்து கொண்டு வருகின்றது.

இதில் சிவாஜிலிங்கம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.

ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது எங்கு எவ்விடத்தில் என்பவற்றை கேட்டறிந்திருக்க வேண்டும்.

இது கைதிகளின் விடுதலைக்கு எடுத்த ஒரு முயற்சியாகவும் அமைந்திருக்கும்.

மாறாக அவ்விடத்தில் மாறாக உணர்;ச்சிவசப்பட்டு பேசியிருக்ககூடாது தற்போது சிறைக்கைதிகளின் நிலையினை யோசித்து பாருங்கள்.

அவர்கள்  ஜனாதிபதி அழைத்தவேளை பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்தால் ஒரு தீர்வு வந்திருக்கும் என்று  ஒருவேளை நினைக்ககூடும் எந்தவொரு பிரச்சினைக்குமான தீர்வு வீதியில் கிடைக்கபோவதில்லை.

உண்மையில் ஜனாதிபதி சரியோ பிழையோ அவர் அந்த இடத்தில் இறங்கி வந்ததென்பது ஒரு பெரிய விடயம் கடந்த கால ஜனாதிபதி இருந்திருந்தால் குறித்த இடத்தில் தடியடிப்பிரயோகம் மற்றும் நீர்ப்பிரயோகம் அல்லாதவிடத்து நான்குபேரையாவது இழுத்துக் கொண்டு செல்லும் நடவடிக்கைதான் அவ்விடத்தில் நடந்திருக்கும்.

ஆகவே எங்களுக்கு கடந்தகாலத்தைவிட தற்போது  ஆட்சியில் கிடைத்திருக்கும் இவ்வாறான உரிமைகளை சாதுரியமாக பயன்படுத்த வேண்டும்.

அதனை விடுத்து எல்லாவற்றையும் நாங்கள் எதிர்மறையாக பார்த்து கொண்டு இருக்கமுடியாது.

மாறாக பார்த்தால் இந்த ஜனாதிபதியிடம் பேசாது நாங்கள் இந்தியாவிடமா? ஜக்கிய நாடுகள் சபையிடமா? பேசப்போகின்றோம்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் கைதிகள் கூட பேச்சுவார்ததை மூலம் தீர்வொன்றைபெறத்தான் எதிர்பார்த்திருப்பார்கள் அந்த வகையில் அவர்களின் எதிர்பார்ப்பினை முறியடிப்பதாகவே இச்செயற்பாடுகள் அமைந்துள்ளது எனவே தற்போது அவர்களைர்தின் விளிம்பில் விட்டு செல்வதாகவே அமைந்துள்ளது.

காரணம் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றால் இதற்கான தீர்வினை எவ்வாறு பெற்றுக் கொள்வது இதற்கான காலம் இளுத்தடிப்பாகவே அமையும்

கைதிகளின் போராட்டம் அவர்களின் கோரிக்கை நியாயமானது இனை நாங்கள் உணர்ந்து கொள்கின்றோம்.

அவர்களுக்கு தீர்வுகிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுகருத்திற்கு இடமில்லை ஆனால் நாங்கள் இதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் மிகவும் சிந்தித்து செயற்படவேண்டும் சமபந்தன் ஐயா இது தொடர்பில் மிகவும் விரிவான விளக்கம் ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். என அவர் தெரிவித்தார்

Leave a comment