கவர்னராக வந்த போது ஜெயலலிதா விமான நிலையத்தில் வரவேற்றது ஆச்சரியமளித்தது: வித்யாசாகர் ராவ்

366 0

நான் கவர்னராக வந்த போது அன்றைய முதல்வர் ஜெயலலிதா விமான நிலையத்துக்கு வந்து என்னை வரவேற்றது ஆச்சரியம் அளித்தது என்று வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

தமிழக கவர்னராக பொறுப்பு வகித்த வித்யாசாகர் ராவ் புத்தகம் எழுதியுள்ளார். கிண்டி ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் புத்தகத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். அதில் வித்யாசாகர்ராவ் பேசியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஏனெனில் நான் கவர்னராக பொறுப்பேற்பதற்காக முதன் முதலில் சென்னை வந்த போது அவர் என்னை வரவேற்க விமான நிலையம் வரமாட்டார் என்றே நினைத்தேன்.

ஏனெனில் தலைவர்களை வரவேற்பதற்காக அவர் விமான நிலையம் வருவது மிகவும் அரிதானது. ஆனால் நான் அதிர்ஷ்டசாலி. அவர் விமான நிலையம் வந்து என்னை அன்போடு வரவேற்றார். இது எனக்கு ஆச்சரியம் அளித்தது.

ஆளும் கட்சியினருடன் எனக்கு நல்ல உறவு இருந்தது. என்றாலும் தமிழக அரசியலில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் எதிர்க்கட்சிகள் எதிர் கருத்துடன் இருந்தன. ஆனால் அவர்கள் எப்போமே என்னை அவமரியாதை செய்தது கிடையாது. பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்னை வந்து சந்தித்து விட்டு சென்றிருக்கிறார்கள். அவர்களுடன் எனக்கு நட்புறவே இருந்தது. ராஜ்பவனை மக்கள் பார்வைக்காக திறந்துவிட்ட போது மக்கள் மிகப்பெரிய ஆதரவு அளித்தனர்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment