தனுஸ்க குணதிலக்கவின் போட்டித் தடை தொடர்பில் இன்று எடுக்கப்பட்ட தீர்மானம்

379 0

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஸ்க குணதிலக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த சர்வதேச 6 ஒருநாள் போட்டிகளுக்கான தடை 3 போட்டிகளுக்கான தடையாக குறைக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள் ஒருவருடத்திற்கு தாமதப்படுத்தவும் அவரின் வருடாந்த ஒப்பந்த கட்டணத்தில் 20 சதவீதத்தை அபராதமாக விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

போட்டி ஒப்பந்தத்தை மீறியமை தொடர்பில் தனுஸ்க குணதிலக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த இந்த தடைக்கு எதிராக அவர் சிறிலங்கா கிரிக்கட்டில் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில் அவர் முன்வைத்த மேன்முறையீட்டுக்கு அமைய இவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவர் தனது தவறை ஏற்றுகொண்டமை இதற்கு காரணமாகும்.

முன்னர் அவருக்கு சர்வதேச 6 ஒருநாள் போட்டிகள் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், வருடாந்த ஒப்பந்த கட்டணத்தில் 20 வீதம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment