இடமாற்றங்களைத் தடுக்க மாணவர்களை தூண்டும் ஆசிரியர்களுக்கெதிராக நடவடிக்கை – அகிலவிராஜ்

224 0

தமது இடமாற்றங்களைத் தடுக்கும் நோக்கில் மாணவர்களை தூண்டும் ஆசிரியர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேவி பாலிகா கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கல்வி வலைப் பின்னலின் மேம்பாட்டுக்காகத் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு தாம் பின் நிற்கப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment