சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்- துமிந்த

Posted by - December 10, 2017

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் தற்பொழுது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்றும் (10) நாளையும் (11) இடம்பெறும் எனவும் நாளை மறுதினம் தேர்தல்கள் அலுவலகத்திடம் அவை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கட்சிக்கன்றி வேறு கட்சிகளுக்கு ஆதரவு வழங்கும் நபர்கள் குறித்து தேர்தலின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

டிரம்பின் தீர்மானத்துக்கு கண்டனம்- இலங்கை பாராளுமன்ற பலஸ்தீன் நட்புறவு சங்கம்

Posted by - December 10, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் இஸ்ரவேலின் தலைநகராக ஜெரூசலத்தை அறிவித்தமையை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை பாராளுமன்றத்திலுள்ள பலஸ்தீன் நட்புறவு சங்கம் அறிவித்துள்ளது. விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ளது. ஜெரூசலத்தை இஸ்ரவேலின் தலைநகராக்குவதற்கும் டெல்அவிவிலுள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்துக்கு மாற்றுவதற்கும் டிரம்ப் எடுத்துள்ள தீர்மானத்துக்கு தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பரிந்துரைகளுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்துள்ள தீர்மானம் மத்திய கிழக்கு சமாதானத்துக்கு பெரும் சவாலாகும் எனவும் அச்சங்கம்

வரலாற்றுப் பாடத்தை பாடசாலைக் கலைத்திட்டத்திலிருந்து நீக்க அரசாங்கம் முஸ்தீபு

Posted by - December 10, 2017

இலங்கை வரலாற்றை பாடசாலைக் கல்வியிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்லாந்து நாட்டிலுள்ள பாடசாலை பாடத்திட்டத்தில் அந்நாட்டின் வரலாறு இடம்பெறாது காணப்படுவதனாலேயே இலங்கையிலும் அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாக பேராசிரியர் ஒருவர் இந்த தகவலைக் கசியவைத்துள்ளார். இவ்வாறு வரலாற்றுப் பாடத்தை பாடசாலை கலைத்திட்டத்திலிருந்து நீக்குவது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கூட்டு எதிர்க்கட்சி, ஐ.தே.கட்சியுடன் இணைவது குறித்த நாமல் ராஜபக்ஸ கருத்து

Posted by - December 10, 2017

ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இணைந்தால் கூட்டு

சிங்கள மொழி தோன்ற முன்னர் சிங்கள மன்னன் எப்படி உருவானார்?

Posted by - December 10, 2017

அண்மையில் றியர் அட்மிரல் சரத் வீரசேகரவால் ‘சிலோன் ருடே’ ஊடகத்திற்கு ‘விக்னேஸ்வரன் பதவி விலகவேண்டும்’ என்கின்ற தலைப்பில் வழங்கப்பட்ட நேர்காணல் தொடர்பாக பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் தாக்குதல் சம்பவம் : இருவர் கைது!

Posted by - December 10, 2017

கிளிநொச்சி பிரதேசத்தில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தின் இரண்டு சந்தேகநபர்கள் மாங்குளம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அரச கடன் குறித்து ஆராய விஷேட பாராளுமன்ற தெரிவு குழு

Posted by - December 10, 2017

அரச கடன் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக எதிர்கட்சி உறுப்பினர் அல்லது கோப் குழுவின் தலைவரின் தலைமையின் கீழ் விஷேட

மண்சரிவு அபாயம் : 400க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்

Posted by - December 10, 2017

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் வெலிமடை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட ஒஹிய, உடவேரிய, லைபோன் ஆகிய தோட்டங்களில் இருந்த தொழிலாளர்கள் குடும்பங்களை தங்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் அரசியலின் திருப்புமுனையே ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் உதயம்

Posted by - December 10, 2017

முஸ்லிம்களின் விடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் முன்னெடுப்பதற்கான வழிவகை பற்றி யோசித்தோம். முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் என்பன இணைந்து

சுமந்திரன் போராளிகளை கொச்சைப்படுத்தும் கதைகளை நிறுத்த வேண்டும்!

Posted by - December 10, 2017

புதிய கூட்டணிக்கு தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதோடு, அதன் சின்னமாக உதய சூரியன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.