வடக்கு கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது- எம்.எ.சுமந்திரன்(காணொளி)

Posted by - December 12, 2017

வடக்கு கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது என, தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் 23 பேர் கைது.!

Posted by - December 12, 2017

இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 5 படகுகளுடன் 23 இந்திய மீனர்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ள 23 மீனவர்களையும் யாழ். கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் இராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏறாவூர் இரட்டைப் படுகொலை விசாரணை : சி.ஐ.டி.யிடம் கையளிக்க உத்தரவு.!

Posted by - December 12, 2017

ஏறாவூர் நகரில் இடம்பெற்ற தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணையை சி.ஐ.டி.யிடம் கையளிக்க ஒழுங்கு செய்யுமாறு, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை, ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதிவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஜெனீராபானுவின் (வயது 32) கணவரான ஐ.எம். மாஹிர் தனது தரப்பு

அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்கு 37 பெண் உறுப்பினர்கள்

Posted by - December 12, 2017

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 08 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கு, இம்முறை மொத்தமாக 37 பெண் உறுப்பினர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்குமான உறுப்பினர்களில் 25 வீதமானோர் பெண்களாக இருக்க வேண்டுமென, உள்ளூராட்சி திருத்தச் சட்டத்துக்கு அமைய, மேற்படி 08 சபைகளிலும் 37 பெண் உறுப்பினர்கள் பெயரிடப்படவுள்ளனர். கல்முனை மாநகர சபையில் 10, அக்கரைப்பற்று மாநகர சபையில் 05, சம்மாந்துறை பிரதேச சபையில் 05, இறக்காமம் பிரதேச சபையில் 03,

உலக இஸ்லாமிய ஒத்துழைப்பு கவுன்சில் கூடுங்கள்- அர்துகான் அழைப்பு

Posted by - December 12, 2017

டிரம்பின் அறிவிப்புக்கு எதிராக பேச்சுவார்த்தை நடத்த உலக முஸ்லிம் நாடுகளின் இஸ்லாமிய ஒத்துழைப்பு கவுன்சிலை எதிர்வரும் புதன்கிழமை கூடுமாறு துருக்கி ஜனாதிபதி ரஷீப் தையிப் அர்துகான் அழைப்பு விடுத்துள்ளார். துருக்கியின் ஸ்தன்பூல் நகரில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் டிரம்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   துருக்கி மற்றும் பலஸ்தீன கொடிகளை ஏந்தியவாறு மக்கள் வெள்ளம் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு வருகின்றனர். ஜெரூசலம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு சர்வதேச அளவில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளமை

மார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்!

Posted by - December 12, 2017

எதிர்வரும் 2018 மார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக்க தேமுனி த சில்வா உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். மாகாண சபை தேர்தல் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட மனு குறித்து ஆராய்ந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்தத் தகவலை நீதிமன்றத்திற்குச் சமர்ப்பித்துள்ளார். மாகாண தேர்தல் தொகுதி நிர்ணய பணிகள் நிறைவடைந்தவுடன், தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை மாகாணசபைகளின் காலம் நிறைவடைந்துள்ளதே ஒழிய,

கொழும்பு – 15 இல் பாரிய ஆர்ப்பாட்டம்

Posted by - December 12, 2017

கொழும்பு – 15 அளுத்மாவத்தை வீதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதால் பெரும் வாகன நெரிசல் நிலவுவதாக எமதுசெய்தியாளர் தெரிவித்தார்.

நியூயார்க் குண்டுவெடிப்பு எதிரொலி: குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் – டிரம்ப்

Posted by - December 12, 2017

நியூயார்க் குண்டுவெடிப்பு சம்பவம் அமெரிக்க குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.