கட்டுநாயக்க விமான நிலையில் வைத்து சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர் கைது
சட்டவிரோதமாக டுபாயிலிருந்து தங்க நகைகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக டுபாயிலிருந்து தங்க நகைகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கட்சியில் இருந்து தனித்து செயற்படும் சகல தரப்பினரும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொள்ளுங்கள். தனித்த பயணம் ஒருபோதும் சாத்தியமாகாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்
இராணுவத்தின் புதிய ஊடாகப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இவ்வாறு இராணுவ ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியின் ஒரு பகுதி இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமான முறையில் விமானப் பயணி ஒருவர் மூலம் டுபாய் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 3 கோடி 20 இலட்சம் பெறுமதியான 5.07 கிலோ தங்க ஆபரணங்களுடன் ஒருவர் கட்டுநாயக்கவிமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தங்க ஆபரணங்கள் சாக்லேட் நிரப்பியிருந்த கைப்பையினுள் மிகவும் சூட்சுமமாக முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகச் சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சி அதிகமாகக் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும், மத்திய, சபரகமுவ, மேல், வடமேல் மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களுக்கும் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் எனவும் மேல், வடமேல், சபரகமுவ, மத்திய மாகாணங்கள் காலை
வரவு செலவுத் திட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் சட்டமூலங்கள் மற்றும் அறிக்கைகள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜனவரி 23ம் திகதி வரை ஒத்திவைக்கப்படும் எனச் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட அறிக்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ஒருமாத காலமாக வரவு செலவுத்திட்ட விவாதம் இடம்பெற்றதுடன்,
உத்தியோகபூர்வ விஜயம் மேகொண்டு இலங்கை வந்துள்ள இந்திய விமானப்படையின் பிரதானி எயார் சீப் மார்ஷல் பிரெண்டர் சிங் தனோஆ மற்றும் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறப்பட்டன. குறித்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராம் உள்ளிட்ட இந்திய விமானப்படையின்
நாட்டின் தொழில் முயற்சியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நோக்குடன் இலங்கை வர்த்தக சங்கமும் கைத்தொழில் சபையும் இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்துவரும் ஆண்டின் சிறந்த தொழில் முயற்சியாளர் விருது விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (11) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 22 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விருது விழாவில் ஆண்டின் சிறந்த தொழில் முயற்சியாளர், ஆண்டின் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர், ஆண்டின் சிறந்த இளம் தொழில்
மித்தெனிய தலாவ பாடசாலை அருகில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் ஒருவர் தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக அம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய நபரொருவரே குறித்த துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும் அயல் வீடுகள் இரண்டுக்கிடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த கருத்து மோதலே துப்பாக்கிச்சூட்டுக்கு காரணம் எனவும் மேலதிக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.