கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்த ஞானசார தேரர்

Posted by - December 16, 2017

கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புகளை நிறுத்துவதற்கு கர்தினால் எடுத்த முயற்சிகளுக்கு ஞானசார தேரர் தனது ஒத்துழைப்புகளை வழங்குவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சை சேவை ஆசிரிய கொடுப்பனவுகளை அதிகரிக்க கோரிக்கை

Posted by - December 16, 2017

பரீட்சை சேவையில் ஈடுபடும் ஆசியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் என ஆசிரியர்கள்  சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு கொடுப்பனவுகள் அதிகரிக்கப் படாத பட்சத்தில் எதிர்காலங்களில் ஆசிரியர்கள் பரீட்சை சேவையில் ஈடுப்படுவதை தவிர்க்க நேரிடும் என ஆசிரிய சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை : 1000த்திற்கும் அதிகமானோர் கைது

Posted by - December 16, 2017

நாடளாவிய ரீதியில் இன்று அதிகாலை 1 மணி முதல் 5 மணி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 501 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இத் தேடுதல் நடவடிக்கையில் 14,706 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட நச்சுத் தண்மையுடைய போதை பொருட்களை வைத்திருந்த 586 பேரும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கி 270 மில்லியன் டொலர் இலங்கைக்கு கடன்

Posted by - December 16, 2017

இலங்கை  அரசாங்கம்  ஆசிய அபிவிருத்தி வங்கியுடன்  270 மில்லியன்  டொலர்  பெறுமதியான  மூன்று  கடன்  ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இக்கடன் தொகை  ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டுத் திட்டத்திற்கும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி  நீர் விநியோகத் திட்டத்திற்கும்  பயன்படுத்தப்படவுள்ளது.

63 ஆவது நாடாக நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.

Posted by - December 16, 2017

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 163 ஆவது நாடாக நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கை  சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. நிலக் கண்ணிவெடித் தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதைத் தொடர்ந்து இவ்வுடன்படிக்கையில் இன்னும் சேராத நாடுகள் இலங்கையை முன்னுதாரணமாகக் கொண்டு அதனைப் பின்பற்றவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் உஸ் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி, கைக்குண்டு என்பவற்றுடன் 2 பேர் கைது

Posted by - December 16, 2017

துப்பாக்கியொன்று மற்றும் கைக் குண்டொன்று என்பவற்றை வைத்திருந்த இருவர் சந்தேகத்தின் பேரில் பொாலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று (16) அல்பிட்டிய மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மி.மி. 9 ரக ரவைகள் 4 உம் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. பிடிகல பொலிஸ் பிரிவிலுள்ள நியாகல தல்கஸ்வெவ பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவைச் சிறையில் 15 வயது சிறுவன் தற்கொலை

Posted by - December 16, 2017

போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் பொலன்னறுவைச் சிறைச்சாலையில் நீதிமன்றத்தினால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 15 வயதுடைய நபர் ஒருவர் இன்று (16) காலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலன்னறுவைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரணவக்க ஆரச்சிலாகே மலித் ரணவன எனும் பெயரையுடைய பதியதலாவ மாவித்தாவெல இல. 79 இல் வசிக்கும் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் அறிவித்துள்ளனர். இவர் தொடர்பிலான விசாரணைகள் பொலன்னறுவைப் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாத்தளையில் பல நிகழ்வுகள் இடைநிறுத்தம்- தேர்தல்கள் ஆணைக்குழு தலையீடு

Posted by - December 16, 2017

மாத்தளையிலுள்ள பல பிரதேசங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுக்கு புத்தகங்கள் விநியோகிக்கும் பல நிகழ்வுகள்  தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதி அமைச்சர் லக்ஷ்மன் வசந்தவின் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியிருந்தன. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது சட்டவிரோதமானது என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பொலித்தீன் கட்டுப்பாடு- மத்திய சுற்றாடல் அதிகாரசபை

Posted by - December 16, 2017

உள்ளுராட்சி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பொலித்தீன் பாவனை தொடர்பில் எழுத்து மூலமாக அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. தேர்தல் பிரச்சாரப் பணிகளின் போது பொலித்தீன் பாவனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுக்குமாறு சுற்றாடல் மத்திய அதிகார சபையிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(15) தெரிவித்திருந்தார். இதற்கமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று உண்மையை மறைத்தோம்: பிரதாப் ரெட்டி

Posted by - December 16, 2017

சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் இருப்பதற்காக ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று உண்மையை மறைத்து அறிக்கை தந்ததாக அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.