248 உள்­ளூ­ராட்­சி­ மன்­றங்களுக்கு நாளை வேட்­பு­ம­னுத்­தாக்கல் ஆரம்பம்

Posted by - December 17, 2017

உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் 248 க்­கான வேட்­பு­மனு  தாக்கல் செய்யும் நட­வ­டிக்கை நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ள­துடன் எதிர்­வரும் வியாழக்கிழமை நண்­ப­க­லுடன் அது நிறை­வ­டை­ய­வுள்­ளது. நாடு தழு­விய ரீதியில் அமைக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் 341 இல் 93 சபை­க­ளுக்கு வேட்­பு­ம­னுத்­தாக்கல் செய்யும் அறி­வித்தல் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது. அதற்­கி­ணங்க குறித்த சபை­க­ளுக்­கான வேட்­பு­மனுத் தாக்கல் கடந்த 11 ஆம் திகதி ஆரம்­ப­மா­ன­துடன் 14 ஆம் திகதி நண்­ப­க­லுடன் நிறை­வுக்கு வந்­தது. இதே­வேளை வேட்­பு­ம­னுத்­தாக்கல் செய்­வ­தற்­கான அறி­வித்தல் கடந்த

ஐ.தே.க. பிர­சா­ரம் அடுத்த மாதம்

Posted by - December 17, 2017

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­கான  பிர­சார நட­வ­டிக்­கை­களை  ஐக்­கிய  தேசியக் கட்சி  எதிர்­வரும் ஜன­வரி மாதம் இரண்டாம் வாரத்­தி­லி­ருந்து  ஆரம்­பிக்­க­வுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின்  ஆலோ­ச­னையின் படி ஐ.தே.கட்­சியின்  தலை­மை­ய­க­மான சிறி­கொத்தா  பிர­சா­ரத்­துக்­கான  ஏற்­பா­டு­களைச் செய்து வரு­கி­றது.  ஐ.தே.கட்சி தொகுதி அமைப்­பா­ளர்­களை  இம்­மாதம்   22 ஆம் திகதி  கொழும்­புக்கு  அழைத்து பிர­சார  நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக  ஆலோ­சனை வழங்­கவும்  நட­வ­டிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக சிறிகொத்தா வட்டாரங்கள்  தெரிவித்தன.

விசேட தேடுதல் நடவடிக்கை, 4 மணி நேரத்தில் 722 பேர் கைது- பொலிஸ் தலைமையகம்

Posted by - December 17, 2017

பொலிஸ் மா அதிபரின் விசேட பணிப்புரையின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட  திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 722 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நேற்று அதிகாலை 1.00 மணி முதல் 5 மணி வரை மேற்கொள்ளப்பட்ட 4 மணி நேர தேடுதல் நடவடிக்கைக்கு 14,706 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 10 பொலிஸ் நாய்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருந்த 586 பேரும் இதில் அடங்குகின்றனர். 6 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும்

நாட்டின் பல பாகங்களிலும் இன்று முதல் மழையுடன் கூடிய காலநிலை

Posted by - December 17, 2017

நாட்டின் பல பாகங்களிலும் இன்று (17) மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் இந்நிலை அடுத்துவரும் சில நாட்களுக்கு தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் திருகோணமலை முதல் ஹம்பாந்தோட்ட வரையுள்ள கடல் பகுதியில் மழையுடன் கூடிய கால நிலை காணப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது

மலேசியப் பிரதமர் இலங்கை வந்தடைந்தார்

Posted by - December 17, 2017

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் இன்று (17) காலை இலங்கை வந்தடைந்துள்ளார். அவர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக  தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை தங்கியிருக்கும் இவர்,  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வெளிவி­வ­கார அமைச்சர் திலக்மாரப்பன உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ளார். அத்துடன், விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புதிய உற்பத்திகள் என்பன தொடர்பில் இரண்டு

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதற்கான ஆறு காரணங்கள்!

Posted by - December 16, 2017

ஆறு காரணங்களாலேயே உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்படுவதாக பவ்ரல் அமைப்பின் பேச்சாளர் ரோகண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களைப் பழிசொல்வது நியாயமா?

Posted by - December 16, 2017

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, தண்டனையில் இருந்து தப்பிப்பதை முடிவிற்குக் கொண்டு வரும் நோக்கில் யுனெஸ்கோ நிறுவனத்தால் கடந்த வாரம் ஒழுங்குபடுத்தப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  செய்தி சேகரிக்க வரும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி, மாட்ட அமைப்பாளர்கள் நியமனம்!

Posted by - December 16, 2017

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் சில தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (16) முற்பகல் இடம்பெற்றது.

ஐ.தே.க செயற்பாட்டாளர்கள் இருவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆத​ரவு!

Posted by - December 16, 2017

மஹா ஓயா பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் உப தலைவர் கே.டீ. சேனாரத்ன, மஹா ஓயா ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அமைப்பின்

விண்ணில் 8 கிரகங்கள் சுற்றி வரும் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு: நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவிப்பு

Posted by - December 16, 2017

பூமியைப் போலவே மனிதர்கள் உயிர் வாழக் கூடிய வேறு கிரகங்கள் உள்ளனவா என்பதை அறிந்துகொள்ள பல நாடுகளும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. தவிர வேற்றுக்கிரகவாசிகள் (ஏலியன்கள்) பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து செல்வதாகக் கூறப்படுவது குறித்தும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இந்நிலையில், நமது சூரிய குடும்பத்தைப்போலவே, விண்வெளியில் மற்றொரு சூரிய குடும்பம் இருப்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. அந்த நட்சத்திரக் கூட்டத்தில் ‘கெப்ளர்-90’ என்றழைக்கப்படும் சூரியனை (நட்சத்திரத்தை) 8 கிரகங்கள் சுற்றி வருகின்றன. இதை