ரஷ்யா பறந்துள்ள அதிகாரிகள் : பேச்சுவார்த்தையில் இணக்கம் எட்டப்படுமா.?

Posted by - December 24, 2017

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யும் தேயிலை மீது ரஷ்யா விதித்துள்ள தடை தொடர்பில் கலந்துரையாட இலங்கை தேயிலைச் சபையின் அதிகாரிகள் இன்று காலை ரஷ்யா நோக்கி பயணமாகியுள்ளனர். ரஷ்யாவின் இந்தத் தடையினை நீக்குமாறு கோரி இலங்கை அதிகாரிகள் நாளைய தினம் ரஷ்ய அரசின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் பிரதி பணிப்பாளர் கலாநிதி கீர்த்தி மொஹட்டி தெரிவித்துள்ளார். கடந்த 15ஆம் திகதி இலங்கையிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தேயிலையில் “கெரப்” எனப்படும் ஒரு வகை வண்டு இருந்ததையடுத்து

எத்தகைய சவால்களுக்கும் முகங்கொடுக்க தயார்.!- சிறிசேன

Posted by - December 24, 2017

iஎத்தகைய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டாலும் தூய அரசியல் இயக்கத்திற்கான தனது அர்ப்பணிப்பை கைவிடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறந்த அரசியல் கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்கு வழங்குவதற்கான பொறுப்பை நிறைவேற்ற வேண்டியது இன்று தேசத்தின் தேவையாக உள்ளது என்றும், தான் அந்த யுகப் பணியை பொறுப்பேற்று இருப்பதாகவும் நாட்டை நேசிக்கும் இலட்சக் கணக்கான மக்கள் இப்பணிக்காக ஒன்று சேர்வார்கள் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

சாரதி இன்றி ஓடிய பஸ் : வவுனியாவில் பதற்றம்

Posted by - December 24, 2017

வவுனியா, ரயில் நிலைய வீதியில் சாரதி இன்றி மினிபஸ் ஒன்று ஓடியதால் மக்கள் பதற்றத்துடன் வீதியில் இருந்து நாலாபுறமும் தப்பி ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ரயில் நிலைய வீதிசென்ற மினி பஸ்சை அரச வங்கி ஒன்றின் முன்னால் நிறுத்திய அதன் சாரதி வங்கிக்குள் சென்றுள்ளார். இதன்போது, குறித்த பஸ் சாரதி இன்றி அவ்விடத்தில் இருந்து ரயில் வீதி நோக்கி நகர்ந்து சென்று எதிரே

ரயிலில் மோதி யானை பலி

Posted by - December 24, 2017

பொலன்னறுவை, செவனப்பிட்டிய, கொலகனா பகுதியில் இன்று அதிகாலை ரயிலில் மோதுண்டு 9 அடி உயரம் கொண்ட யானை ஒன்று உயிரிழந்துள்ளது.கொழும்பிலிருந்து, மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே, குறித்த யானை உயிரிழந்துள்ளதாக வெலிகந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஶ்ரீ லங்கா எயார்லைன்ஸ் பணிப்பாளர்கள் இராஜினாமா.!

Posted by - December 24, 2017

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபையைச் சேர்ந்த 6 பேர் இராஜினாமா செய்துள்ளனர். புதிய பணிப்பாளர் சபையை நியமிக்கும் பொருட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

ஸ்ரீ ல.சு.க.யின் வேட்பு மனுவில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவர் ஐ.தே.க. யில் இணைவு

Posted by - December 24, 2017

வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுவில் இடம்பெற்ற வேட்பாளர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. சந்திராவனி என்பவரே இவ்வாறு கட்சி மாறியுள்ளார்.  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளர் பி.கருணாதாஸ முன்னிலையில் இவர் அக்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போதைப் பொருளுடன் 3 பேர் கடற்படையினரால் கைது

Posted by - December 24, 2017

தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட மீனவர்கள் மூவர் காங்கேசந்துறை கடற்படையினரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 100 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படையின் வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடற்படையினரால் கைதான மூவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது

கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

Posted by - December 24, 2017

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணி, அரச அச்சக திணைக்களத்தில் கடுமையான  பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச அச்சகத்தில் தனியான பாதுகாப்பான ஒரு பிரிவு இந்த அச்சுப் பணியை மேற்கொள்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது. முதலில் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட 93 உள்ளுராட்சி சபைகளின் வாக்குச் சீட்டுக்கள் முதலில் அச்சிடப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பகுதிக்கான பணிகள் நிறைவடைந்த பின்னர் எஞ்சிய 248 சபைகளுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வன்னி இறுதி யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு பிரித்தானியா தடை

Posted by - December 24, 2017

ukவன்னி இறுதி யுத்தத்தில் கலந்துகொண்ட முன்னாள் இராணுவ பிரதானிகள் 10 பேருக்கும் புலனாய்வுத்துறையுடன் தொடர்புபட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கும் பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் கீழ் மனித நேய நடவடிக்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களின் பெயர்களும் பிரித்தானிய அதிகாரிகளினால் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறு யுத்தக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் பிரித்தானியாவுக்குள் பிரவேசித்திருந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது. உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்புக்களினால் பிரித்தானிய

இலங்கை ஜெரூசலத்துக்கு ஆதரவு வழங்கியமையால் 870 கோடி ரூபா இழப்பு

Posted by - December 24, 2017

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஜெரூசல யோசனைக்கு எதிராக இலங்கை வாக்களித்தமையினால் 870 கோடி ரூபா இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்த அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்படும் உதவித் தொகைகளை நிறுத்தப் போவதாக டிரம்ப் ஐ.நா. கூட்டத்தில் வைத்தே எச்சரித்திருந்தார். இது தவிர அமெரிக்காவினால் இலங்கைக்கு வேறு வகையிலான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உதவிகளும் எதிர்வரும் நாட்களில் நிறுத்தப்படக் கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.