அரியாலை இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பம்!
யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் கடந்த 22ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பமவம் தொடர்பான சி.சி.டி. வி காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு இடம்பெறுவற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் துப்பாக்கி பிரியோகம் இடம்பெற்ற பகுதியை நோக்கி உயிரிழந்த இளைஞர் செல்வதும் துப்பாக்கிதாரிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றவர்கள் செல்வது போன்ற சீ.சீ.டி.வி காணொளி வெளியாகியுள்ளது. இந்த காணொளியில் தற்போது குற்றத்தடுப்புப் பிரிவினரின் விசாரணை வலயத்திலுள்ள முச்சக்கரவண்டியில் இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் செல்வதும்

