அட்டனில் பிரதமர் தலைமையில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு 

Posted by - October 29, 2017

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று ஹட்டன் டன்பார் மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதன்போது மக்களுக்கு 2 ஆயிரத்து 864 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதனிடையே இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் இராதா கிருஸ்னண், மலையகத்தில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பொருளாதாரம் நிலை தொடர்ந்தும் பின்தங்கியே உள்ளதாக தெரிவித்தார். இதேவேளை,

அரியாலையில் உயிரிழந்த தாய் மற்றும் 3 குழந்தைகளின் இறுதிக் கிரியைகள்  இடம்பெற்றன

Posted by - October 29, 2017

நாட்டையே பெரும் சோகத்திற்குள்ளாக்கிய யாழ். அரியாலை சம்பவத்தில் உயிரிழந்த நால்வரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன. பணக் கொடுக்கல் வாங்கல் மூலம் இறுதியில் பிஞ்சு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பமே பலியாகியானது. யாழ். அரியாலை பகுதியில் 28 வயதான இளம் தாய் தனது நான்கு வயதான பெண் குழந்தைக்கும், இரண்டு மற்றும் ஒரு வயதான ஆண் குழந்தைகளுக்கும் நஞ்சு கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருந்தார். இந்தப் பெண்ணின் கணவனும் கடந்த மாதம் மூன்றாம் திகதி தற்கொலை

விமலிடம் உள்ள குண்டுகளை கைப்பற்றி செயலிழக்கச் செய்ய வேண்டும் – நடராசா

Posted by - October 29, 2017

நாடாளுமன்றத்தை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்று கூறுகின்ற செயற்பாடானது, இலங்கை ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்குகின்ற விடயமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார். அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நாடாளுமன்றத்திற்கு குண்டு தாக்குதல் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். இவ்வாறான கருத்துக்கள் இலங்கை ஜனநாயகத்தை மதியாதன்மையின் உச்சக்கட்ட செயற்பாடாகும். இவ்வாறானவர்களின் கருத்துக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு

மக்கள் சக்தி ஆயிரம் வேலைத்திட்டத்தின் கீழ் புதிய பாலம்

Posted by - October 29, 2017

பலாங்கொடை பீல்லகும்புர பகுதி மக்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு வேண்டுகோளை மக்கள் சக்தி குழுவினரிடம் முன்வைத்தனர். மக்களின் அந்த கோரிக்கை குறுகிய காலத்திற்குள் இன்று நிறைவேற்றப்பட்டது. இரத்தினபுரி – பலாங்கொடை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பீல்லகும்புர கிராமத்தில் 300 இற்கும் அதிகமான மக்கள் போக்குவரத்து செய்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர். இந்த மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட திட்டம் இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. பொல்வத்த, கெசெல்வத்த, தென்னவத்த, ஹேன்யாய மற்றும் பஹன்கந்த ஆகிய

அரி­யா­லை­யில் ஓர் உயிர் காவு கொள்­ளப்­பட்­டுள்­ளது!

Posted by - October 29, 2017

 போர்க் காலத்­தில் சாதா­ர­ண­மாக மலிந்து கிடந்த துப்­பாக்­கிச் கூட்­டுக் கொலை­கள் அதன் பின்­னர் மெல்ல மங்­கிப்­போ­யின. வாள்­வெட்­டுக்­கு­ழுக்­கள் தலை தூக்­கு­வ­தா­கப் பொலி­சா­ருக்கு எதி­ரா­கக் குற்­றச்­சாட்டு எழுந்­தது.

வறட்சி காரணமாக புத்தளம் மாவட்டம் பாதிப்பு

Posted by - October 29, 2017

நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதேநேரத்தில் மேலும் சில பகுதிகளில் தொடர்ந்தும் வறட்சி நீடிக்கின்றது. வறட்சியால் புத்தளம் மாவட்ட விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தல், மகாகும்புக்கடவல, ஆராச்சிக்கட்டு, பள்ளம, ஆனமடு, கருவலகஸ்வெவ மற்றும் நவகத்தேகம ஆகிய பகுதிகளில் போதிய மழைவீழ்ச்சி கிடைக்காமையினால் வேளான்மை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இந்த பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் ஏனைய நீர் நிலைகளில் உள்ள நீர் வற்றிப் போயுள்ளது. வறட்சியால் பல ஏக்கர் பயிர் நிலங்கள்

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் சொத்து விவரத்­தை வழங்க தேர்­தல்­கள் செய­லகம் மறுப்பு!

Posted by - October 29, 2017

தக­வல் அறி­யும் சட்­டத்­தின் கீழ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் சொத்து விவரத்­தை வழங்­கு­மாறு தேர்­தல் திணைக்­க­ளத்­தி­டம் ஊட­க­வி­ய­லா­ள­ரால் கோரப்­பட்ட விண்­ணப்­பத்­துக்கு அமைய குறித்த விவரங்­களை வழங்க முடி­யாது என தேர்­தல்­கள் செய­லக அதி­காரி பதி­ல­ளித்­துள்­ளார்.

சிறப்பு அதி­ர­டிப்­படை முகா­மின் கழி­வு­கள் நேர­டி­யா­கவே பண்­ணைக் கட­லுக்­குள்!

Posted by - October 29, 2017

யாழ்ப்­பா­ணம் சிறப்பு அதி­ர­டிப்­படை முகா­மின் கழி­வு­கள் நேர­டி­யா­கவே தனி­யான குழாய் வழி­யா­கப் பண்­ணைக் கட­லுக்­குள் செலுத்­தப்­ப­டு­வது தொடர்­பில் எவ­ருமே கண்­டு­கொள்­ள­வில்­லை­யென அந்­தப் பகுதி மக்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!

Posted by - October 29, 2017

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இணுவிலில் இராணுவ வாகனம் மோதுண்ட 36 வயதான பாலகிருஸ்ணன் விஜிதரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

விசாரணையைத் தவிர்க்கவே மூன்று கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் – சிறைச்சாலை கண்காணிப்பாளர்

Posted by - October 29, 2017

தம்மீதான விசாரணையைத் தவிர்க்கவே மூன்று அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என சிறைச்சாலைக் கண்காணிப்பாளர் அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.