ரத்மலான விமான நிலையத்தை சிவில் போக்குவரத்துக்காக விஸ்தரிக்க திட்டம்

Posted by - December 25, 2017

ரத்மலான விமானப்படை விமான நிலையத்தை விஸ்தரித்து சிவில் விமான போக்குவரத்தை விருத்தி செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி, விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு தெற்குப் பிரதேசத்திலுள்ள 25 ஏக்கர் நிலப்பரப்பை சிவில் விமான சேவைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை முகாமின் ஒரு பகுதியை அந்த படைப் பிரிவின் இணக்கப்பாட்டுடன், விமான நிலையத்தின் வடக்கு பகுதியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

துருக்கியில் 2756 அரச ஊழியர்கள் பணி நீக்கம்

Posted by - December 25, 2017

துருக்கி அரசாங்கம் அந்நாட்டிலுள்ள 2756 அரச ஊழியர்களை சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சதி முயற்சியில் பங்குதாரர்களாக செயற்பட்டவர்களே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 137 பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், இராணுவ வீரர்கள் 637 பேரும் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதற்கு முன்னரும் சதிப்புரட்சி குற்றம்சாட்டப்பட்ட அரச ஊழியர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்ததாகவும் அச்செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன

நத்தார் தினத்தை முன்னிட்டு 510 கைதிகள் விடுதலை

Posted by - December 25, 2017

நத்தார் தினத்தை முன்னிட்டு 510 சிறைக்கைதிகளை இன்று (25) விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து இந்தக் கைதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

பதுளை – கொழும்பு இரவு பகல் விசேட ரயில் சேவை

Posted by - December 25, 2017

நத்தார் காலம் மற்றும் பாடசாலை விடுமுறை என்பவற்றைக் கருத்தில் கொண்டு கொழும்பு- பதுளை நோக்கி பயணிக்கும் விசேட ரயில் போக்குவரத்துச் சேவையை நடைமுறைப்படுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிய இந்த இரவு பகல் ரயில் சேவை 2018 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

மூத்த ஊடகவியலாளர் கோபு ஐயா நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு!

Posted by - December 24, 2017

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்ப்பாட்டில் ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.எம்.கோபாலரட்ணத்தின் (கோபு ஐயா) நினைவு தினம் இன்று யாழில் அனுஸ்ரிக்கப்பட்டது.

சுமந்திரன் புதிய அரசில் உத்தியோகப்பற்றற்ற அமைச்சர்!

Posted by - December 24, 2017

தமிழரசுக்கட்சி ஊடகப்பேச்சாளர் எம்.சுமந்திரன் புதிய அரசில் உத்தியோகப்பற்றற்று அமைச்சு பதவியினை ஏற்றிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழ் ஊர்காவற்றுறையில் கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - December 24, 2017

யாழ் ஊர்காவற்றுறை தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். தம்பாட்டியில் அமைக்கப்பட்ட மீன் சந்தையில் கடற்றொழிலாளர்களிடம் புதிதாக அறவிடப்படும் வரியை நிறுத்துமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்க அங்கத்தவர்களிடம் கொள்வனவு செய்யப்படும் கடல் உணவு வகைகள், உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும். அதன் பின்னர் வரும் மேலதிக கடல் உணவுகளே வெளியிடங்களுக்கு அனுப்பப்படும். ஊர்காவற்றுறை பிரதேச

அரசஊழியர்வீட்டுத்திட்டத்தில் அரசஉத்தியோகத்தர்கள் வசிப்பதற்கான அடிப்படைதேவைகள் பூர்த்திசெய்யப்படாமல்உள்ளதாக தெரிவிப்பு.

Posted by - December 24, 2017

அரசஊழியர்வீட்டுத்திட்டத்தில் அரசஉத்தியோகத்தர்கள் வசிப்பதற்கான அடிப்படைதேவைகள் அரச அதிகாரிகளின் அசமந்தபோக்கினாலே பூர்த்திசெய்யப்படாமல்உள்ளதாக ஓமந்தை அரசஊழியர்வீட்டுத்திட்ட கிராமஅபிவிருத்திச்சங்கத்தலைவர் க.பேர்ணாட் தெரிவித்துள்ளார் ஓமந்தை அரசஊழியர்வீட்டுத்திட்ட கிராமஅபிவிருத்திங்கத்தின் ஏற்பாட்டில் மக்கள் கலந்துரையாடல் ஒன்று 23.12.அன்று இடம்பெற்றது அதில் தலைமைதாங்கியுரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் ஓமந்தை அரசஊழியர்வீட்டுத்திட்டபகுதியில் அரசஊழியர்களுக்கு 600 காணிகள் வழங்கப்பட்டு 6ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது எனினும் இங்கு 60 அரசஉத்தியோகத்தர் குடும்பங்களே வீடுகட்டிகுடியேறியுள்ளனர் குடியேறிய குடும்பங்களில் 40 குடும்பங்களே நிரந்தரமாக வசிக்கின்றனர் வசிக்கும் குடும்பங்களுக்கு போதிய வீதியமைப்பு வசதியை வவுனியா தெற்கு

பலாலி இராணுவ முகாம் சிப்பாய் திடீர் மரணம்!!

Posted by - December 24, 2017

யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றிய 29 வயதுடைய இராணுவச் சிப்பாயொருவர் இன்று மரணமடைந்துள்ளார். நேற்றைய தினம் இவர் சுகவீனமுற்ற நிலையில் பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று மரணமானார். மரணமானவர் யட்டியாந்தோட்ட பகுதியை சேர்ந்த 29 வயதுடைய மதுசங்க எனவும் அண்மையில் திருமணமான அவருக்கு 03 மாத வயதுடைய குழந்தையொன்று உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

பருந்திதுறையில் கஞ்சா கலந்த புகையிலை தொகையுடன் மூவர் கைது

Posted by - December 24, 2017

கஞ்சா கலந்த 100 கிலோ கிராம் புகையிலையை தம்வசம் வைத்திருந்த 3 பேர் பருந்திதுறை கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பாருத்திதுறை காவல்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். இந்த போதைப்பொருளை கொண்டு வந்த படகும் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது. பருத்திதுறை பிரதேசத்தை சேர்ந்த 40, 44 மற்றும் 45 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று பருத்திதுறை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்