நாட்டின் பல பகுதிகளில் சீரற்றக்காலநிலை இன்றும் தொடரும்

Posted by - October 31, 2017

நாட்டின் நிலவும் சீரற்றக்காலநிலை இன்றும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், மத்திய மலை நாட்டை அண்டி பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான அடை மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன்

தாஜுதீன், லசன்த கொலை : ரயல் அட் பார் முறையில் விசாரணை

Posted by - October 31, 2017

தாஜுதீன், லசன்த கொலை வழக்குகளை ரயல் அட் பார் முறையில் விசாரணை நடத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

கொழும்பு நகரை கட்டியெழுப்ப குடிநீர் வசதிகள் தேவை-சம்பிக்க

Posted by - October 31, 2017

கொழும்பு நகரிலுள்ள வருமானம் குறைந்த 30 ஆயிரம் குடும்பங்கள் வரையில் 24 மணி நேரத்துக்கும் குடிநீர் கிடைப்பதில்லை எனவும், கொழும்பு நகரை கட்டியெழுப்புவதாயின் குடிநீரை வழங்குதற்கான சக்தியை நீர்பாசனத் திணைக்களத்துக்கு வழங்கப்பட வேண்டுமேன மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மட்டக்குளியில் நிர்ணமானிப்பட்டுள்ள மெத்சந்த செவன வீடமைப்புத் தொகுதியின் முதல் கட்டமாக  மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் கடந்த இரு வருட ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை-சிசிர ஜயகொடி

Posted by - October 31, 2017

நல்லாட்சி அரசாங்கம் கடந்த இரு வருட ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சி காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் இவ்வாறான இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது நிலவிய பொருளாதார வீழ்ச்சி தற்போது ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

Posted by - October 31, 2017

நாடளாவிய ரீதியில் தற்போழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்துவோர் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்று அதிவேக நெடுஞ்சாலை தகவல் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலமையில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 மீற்றர் வேகத்திற்கு வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்காக இரண்டு வாகனங்களிற்கு இடையிலான இடைவெளியை 2 மீற்றராக வைத்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திடீர் சுற்றிவளைப்பு – கம்பஹாவில் 27 பேர் கைது

Posted by - October 31, 2017

கம்பஹா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது, 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முதித்த புஸ்ஸெல்ல மற்றும் கம்பஹா தலைமையக பிரதான பொலிஸ் பரீட்சகர் லக்ஷ்மன் பண்டார ஆகியோரின் ஆலோசனையின் பேரில், கம்பஹா குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் இத்திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். இச்சிற்றி வளைப்பின்போது, கம்பஹா மாவட்டத்திற்கு பாரியளவில் ஹெரோயின் போதைப் பொருள் விநியோகித்து வரும் இருவரையும், அவர்களிடமிருந்து போதைப்பொருளை விற்பனைக்காக வாங்கிச் செல்லும்

அபிவிருத்தி நடவடிக்கைகள் இன்னும் 2 வருடங்களில் துரிதமாக நிறைவு செய்யப்படும்-ரணில் விக்ரமசிங்க

Posted by - October 31, 2017

நாட்டில் நிலவுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை இன்னும் இருவருடங்களில் துரிதமாக நிறைவு செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். “மெத் சந்த செவன” வீட்டு திட்டத்தின் ஒரு கட்ட நிகழ்வாக மாதம்பிட்டிய ஹேனமுள்ள பிரதேசத்தில் 218 வீடுகளை பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். நாடு முகங்கொடுத்து வருகின்ற கடன் தொல்லை காரணமாக இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காரணமாகவே கடந்த இரண்டு வருடங்களாக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாது சென்றதாக

வீதி ஒழுங்குகளை முறையாகக் கடைப்பிடித்த சாரதிகளுக்குக் கௌரவிப்பு

Posted by - October 31, 2017

வீதி ஒழுங்குகளை முறையாகக் கடைப்பிடித்து வாகனங்களைச் செலுத்திய சாரதிகளைக் கௌரவிக்கும் நிகழ்வொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு இணங்க ஆரம்பிக்கப்பட்டுள்ள, வீதி ஒழுங்குகளை முறையாகக் கடைப்பிடித்து வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிந்து பெறுமதிமிக்க பரிசுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது., ஒரு மாத குறுகிய காலப்பகுதியில் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாரதிகள் கண்டறியப்பட்டிருப்பதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். வீதி ஒழுங்கு விதி முறைகளை மதித்துச்

அரசியலமைப்பை விட பொருளாதாரத் தீர்வே முக்கியம் – சுசில் பிரேமஜயந்த

Posted by - October 31, 2017

நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டிற்கு புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு முன் பொருளாதாரத் துறையில் ஒரு நிலையான அபிவிருத்தியைக் கொண்டுவர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியைச் சந்தித்தார்

Posted by - October 31, 2017

புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க இன்று (31) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். தனது பதவியின் பொறுப்புக்களை கையேற்றதன் பின்னர் புதிய கடற்படைத் தளபதியாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியை சந்தித்ததுடன், சம்பிரதாயபூர்வ நினைவுப் பரிசில்களும் இதன்போது பரிமாறிக்கொள்ளப்பட்டன.