மதவாதத்தை இல்லாதொழித்த நாடாக முன்னோக்கிச் செல்ல கல்வியால் மட்டும் முடியும் – அகிலவிராஜ்

Posted by - November 3, 2017

இனபேதம், குலபேதம் மற்றும் மதவாதத்தை இல்லாதொழித்து நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடிவது, கல்வியின் ஊடாக மாத்திரமே என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையான கட்டுரை மற்றும் சித்திரப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே கல்வியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில் தேசிய ஒற்றுமையின்மை காரணமாக நாம் பின்னோக்கிச் சென்றுள்ளதாகவும் தற்போது புதிய பாதையில் பயணிக்கும் வாய்ப்பு கிட்டியிருப்பதாகவும், அண்மையில் வழங்கப்பட்ட ஆசிரியர்

அரசாங்கத்தின் ஊழல் மோசடிக்கு எதிரான மக்கள் கருத்தெடுப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் – JVP

Posted by - November 3, 2017

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை, அரசாங்கத்தின் ஊழல் மோசடிக்கு எதிரான மக்கள் கருத்தெடுப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த தேர்தலை அரசாங்கம் விருப்பத்துடன் மக்களுக்கு வழங்கவில்லை என்றும், தேர்தலை மிகவும் பிற்போட்டுவிட்டு இறுதியாக எடுக்கப்பட்ட தீர்மானம் இதுவென்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை ராஜபக்‌ஷ அரசாங்கத்தைப் போன்றே தற்போதைய அரசாங்கமும் மேற்கொள்கின்ற ஊழல் மோசடிகளுக்கு

வடக்கில் அசாதாரண காலநிலை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted by - November 3, 2017

வளிமண்டல தாழமுக்கம் காரணமாக வட மாகாணத்தில் கன மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் கடந்த 05 நாட்களாக பெய்து வரும் மழையினால் தற்போது 57.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார். குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் அதிகமான மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்ட இடமாக தீவகப்பகுதி காணப்படுவதுடன், அங்குள்ள மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இதுவரையும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இரண்டாம் இடைநிலைப் பருவப்பெயர்ச்சி காலநிலையாலேயே தற்போது மழைவீழ்ச்சி

நாம் பொறுமையின் எல்லையைத் தாண்டிவிட்டோம் – இரா.சம்பந்தன்

Posted by - November 3, 2017

“நாம் பொறுமையின் எல்லையைத் தாண்டிவிட்டோம். பல விட்டுக்கொடுப்புகளையும் செய்துள்ளோம். எனவே, இனிமேல் பொறுமைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்காது. தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வே வேண்டும். இதனை நாம் அடைந்துகொள்ள இலங்கை அரசுக்கு தென்னாபிரிக்க அரசு கடும் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும்.” என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ரொபினா மார்க்ஸ், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பு

தொண்டமானின் பெயர் நீக்கத்திற்கு எதிராக கொட்டகலையில் ஹர்த்தால்

Posted by - November 3, 2017

ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் பலகையில் இருந்து தொண்டமானின் பெயரை நீக்கியமைக்கு எதிராக இன்று கொட்டகலை நகரில் எதிர்ப்பு ஆர்பாட்டமும் பேரணியும் இடம்பெற்றது. இவ் ஆர்பாட்டத்திற்கு கொட்டகலை நகர வர்த்தகர்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஹர்த்தாலில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமாகிய கணபதி கணகராஜ், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வெள்ளையன் திணேஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வன், இ.தொ.கா

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியே வெற்றிபெறும் – தயா கமகே

Posted by - November 3, 2017

இந்த நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியே வெற்றிபெறும். அதற்கான வேலைத்திட்டங்களையும் நடவடிக்கைகளையும் இப்பொழுதே முன்னெடுத்து வருகின்றோம் என ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார். ஹட்டன் நோர்வூட் பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மலையக பிரதேசத்தில் மருத்துவ குணமுல்ல மரக்கன்றுகளையும், வெளிநாட்டவர்கள் விரும்பதக்க ரோஜா பூ வளர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்காக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர்

அரியாலை துப்பாக்கிச் சூடு – விசேட அதிரடிப்படை அதிகாரி மற்றும் கான்ஸ்டபிள்

Posted by - November 3, 2017

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவற்துறை விசேட அதிரடிப்படையின் உதவி காவற்துறை அதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்பு பிரிவினர் இன்று அவர்களை கைது செய்துள்ளனர். கடந்த மாதம் 22 ஆம் திகதி குறித்த பகுதியில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் துப்பாக்கிதாரரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானார். இதனிடையே, தாக்குதல்தாரிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் துப்பாக்கி, முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளி என்பன கொழும்பில் இருந்துச் சென்ற

மஹிந்த சபாநாயகரிடம் முறைப்பாடு

Posted by - November 3, 2017

சபாநாயகரிடம் முறையிட்டே நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்ற தாம் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.   நாடாளுமன்றத்தில் உரையாற்ற எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, உரையாற்ற வாய்ப்பு கிடைக்காத நிலையில், சபாநாயகரிடம் முறையிட்டே அந்த வாய்ப்பை பெற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார். தற்போது புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதம் இடம்பெறுகின்றது. இது சமூகத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் கோரிய ஒன்றல்ல என அவர் கூறியுள்ளார். அரசியலமைப்பு உருவாக்க சபையொன்றை

குடு ருஜினியின் சகோதரி கைது

Posted by - November 3, 2017

மஹரகம பிரதேசத்தில் போதைப்பொருள் விநியோகித்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹரகம காவற்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரிடமிருந்து 40 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர். அத்துடன் குறித்த பெண்ணின் மூத்த சகோதிரியும் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார் என தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பெண்ணை அப்பகுதியில் உள்ள ஹெரோயின் பாவனையாளர்கள், குடு ருஜினி

சுனாமி ஒத்திகை

Posted by - November 3, 2017

சுனாமி தொடர்பான ஒத்திகை நிகழ்வு ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் அதற்கான ஒத்திகை நிகழ்வுகள் ஆரம்பமாகும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் சரத் பிரேமலால் தெரிவித்துள்ளார். இந்த ஒத்திகை நிகழ்வுகள் ஒரு மணித்தியாலம் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார். நவம்பர் 5ஆம் திகதி சுனாமி சமிக்ஞை ஒன்று விடுக்கப்பட உள்ளது. அதவாது இவ்வாறான நிலைமையொன்று ஏற்படலாம் என்பதற்கான