ராஜித சேனாரத்ன அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டும்

Posted by - November 5, 2017

சைட்டம் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டும் என ராமாஞ்ஞ நிக்காயவின் மகாநாயக்க நாபானே பேமசிறி தேரர் தெரிவித்துள்ளார். மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர்கள் இன்று மகாநாயக்கரை சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, சைட்டம் பிரச்சினை தொடர்பில் இன்று காலை மாத்தளையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

யாழ் வசாவிளான் சமூக நலன் அமைப்பினரின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - November 5, 2017

யாழ் வலி வடக்கு பலாலி பகுதியில்  இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்   யாழ் வசாவிளான் சமூக நலன் அமைப்பினர் ஏற்பாடு செய்த இப்போராட்டம் இன்று காலை யாழ் வசாவிளான் பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமாகி பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தின் வாசஸ்தலம் வரை சென்றது  முப்பது வருடங்களிற்கு மேலாக படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமது நிலங்களை விடுவித்து தங்கள் அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்வைக்குமாறு ஆரப்பாட்டத்தில்

நாட்டின் பல பிரதேசங்களில் மழை

Posted by - November 5, 2017

இன்றைய தினம் நாட்டின் பல பிரதேசங்ளில் 100 மில்லி மீட்டர் வரையில் கடுமையான மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், மத்திய, சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. மழை பொழியும் போது தற்காலிகமாக கடுமையான காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கத்தில் இருந்து அவதானமாக இருக்குமாறு அத் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.

ஞானவைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு நகைகள், பணம் : வவுனியாவில் சம்பவம்

Posted by - November 5, 2017

வவுனியா வைரவபுளியங்குளம் ஞானவைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு நகைகள், பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு உடைக்கப்பட்டு குறித்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, விசேட அபிஷேகங்களுடன் பூஜை இடம்பெற்றமையினால் மூலஸ்தான விக்கிரகத்தில் அணியப்பட்டிருந்த 2 பவுண் சங்கிலி திருடப்பட்டுள்ளதுடன் வேறு பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். காலை பூஜைகளுக்காக ஆலய பூசகர் கதவை திறந்தபோதே பூட்டு உடைக்கப்பட்டதை அவதானித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார்

கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட கனேடிய உயர் ஸ்தானிகர்

Posted by - November 5, 2017

கனடாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் டேவிட் மெகினன் கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட  கனேடிய உயர் ஸ்தானிகர் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்காவை பல்லேகலையிலுள்ள அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார். சமஷ்டி ஆட்சி மற்றும் மாகாண ஆட்சி முறைமை பற்றி உயர் ஸ்தானிகர் கருத்துப் பரிமாறினார். அதன்போது அவர் தெரிவித்தாவது தமது நாடான கனடாவில் சமஷ்டி ஆட்சி முறைமை அமுலில் உள்ளது. இருப்பினும் அது இலங்கைக்குப் பொருந்துமா இல்லையா? என்பதைத் தன்னால் கூற

மூவரைத் தேடும் பணி தொடர்கிறது ; கடற்படையின் சுழியோடிகள் களத்தில்

Posted by - November 5, 2017

மாத்தளை, லக்கலை – தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்று காணாமல் போன மேலும் மூவரைத் தேடும் நடவடிக்கைகள் இன்றும் இடம்பெற்று வருகின்றது.இதேவேளை, காணமால் போனவர்களை தேடும் நடவடிக்கையில், கடற்படையின் விசேட சுழியோடிகள் கொண்ட குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.நாத்தாண்டியாவில் இருந்து வேனில் மாத்தளை, லக்கலை தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்ற   அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல்போயிருந்தனர்.இந்நிலையில், அவர்களில் ஐவரின் சடலம் கடற்படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் துணையுடன் மீட்கப்பட்டது.இவ்வாறு  இரண்டு ஆண்கள் மற்றும் மூன்றும் பெண்களின்

இரணைமடுக்குளத்தின் 80 வீதமான அபிவிருத்தி பணிகள் நிறைவு

Posted by - November 5, 2017

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி இரணைமடுகுளத்தின்  அபிவிருத்தி பணியின் 80 வீதமான பணிகள் நிறைவுற்ற நிலையில் இரண்டு வருடங்களின் பின் இவ்வருடம் வழமையைவிட  இரண்டு அடி நீர் மேலதிகமாக சேமிக்கக் கூடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரணைமடுக்குளத்தில் வழமையாக 34 அடி நீர் சேமிக்கப்படும் ஆனால் இவ்வருடம் போதிய மழைவீழ்ச்சி கிடைக்கும்  போது 36 அடி வரை நீரை சேமிக்க முடியும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளிநொச்சியில்  கடந்த

வேட்பு மனு ஏற்பு 27 ஆம் திகதி ஆரம்பம்

Posted by - November 5, 2017

உள்ளுராட்சி சபைத் தேர்லுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 27 ஆம் 28 ஆம் 29 ஆம் திகதிகளிலும் 30 ஆம் திகதியும் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை அமைச்சர் பைஸர் முஸ்தபா கடந்த 01 ஆம் திகதி வெளியிட்டதனைத் தொடர்ந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உத்தேச அரசியலமைப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் அறிகுறி

Posted by - November 5, 2017

புதிய அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்வரும் சில மாதங்களுக்கு ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்பொழுது உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கைக்கு எதிராக எழுந்துள்ள மகா சங்கத்தினரின் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் முன்வைக்கும் கருத்துக்கள் குறித்து பொது மக்களுக்கு விளக்கம் அளிக்க இந்த கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தலும், அதனைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலும்

மங்களவின் கன்னி வரவு செலவுத் திட்டம் 9 ஆம் திகதி சபைக்கு

Posted by - November 5, 2017

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி பிற்பகல் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் முதலாவது வரவு செலவுத் திட்டமும் ஆகும். இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்வைக்கப்படும் அடுத்த வருடத்துக்கான மொத்த செலவுகள் 3982 பில்லியன் ரூபா என மதிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்துக்கான (2018) அரசாங்கத்தின் மொத்தச் செலவுகள் இவ்வருடத்துக்காக (2017) ஒதுக்கப்பட்ட கடந்த வரவு செலவுத் திட்டத்தின் செலவுகளுடன் ஒப்பிடும் போது 355