உத்தேச அரசியலமைப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் அறிகுறி

233 0

புதிய அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்வரும் சில மாதங்களுக்கு ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்பொழுது உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கைக்கு எதிராக எழுந்துள்ள மகா சங்கத்தினரின் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் முன்வைக்கும் கருத்துக்கள் குறித்து பொது மக்களுக்கு விளக்கம் அளிக்க இந்த கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தலும், அதனைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலும் நடைபெறவுள்ளதனால் புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகளை தேர்தல்களின் பின்னர் நடாத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பான  விவாதத்தை தொடந்து இந்த ஒத்திவைப்பு அறிவிப்பை அரசாங்கம் அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a comment