தரமற்ற எரிபொருள் கப்பலை பெற்றுக்கொள்ளுமாறு அர்ஜூனவுக்கு அச்சுறுத்தல்

Posted by - November 6, 2017

தரம் குறைந்ததென நிராகரிக்கப்பட்ட எரிபொருள் கப்பலை நாட்டிற்கு பெற்றுக்கொள்ளுமாறு அரசியல் மற்றும் வர்த்தக ரீதியில்  தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி கூட்டத்தில் கைகலப்பு

Posted by - November 6, 2017

முல்லைத்தீவில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் முறைப்பாடுகள் எவையும் தமக்கு கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நேற்று (05) நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, எஸ். சிவமோகன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தை ஒளிப்பதிவு செய்வதற்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு இதன்போது அனுமதி மறுக்கப்பட்டது. எவ்வாறாயினும், இந்தக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் அங்கு மோதல் ஏற்பட்டதை அங்கிருந்த ஒருவர்

சாகும் வரை உண்ணாவிரதம்- மருத்துவ மாணவர்களின் பெற்றோர்

Posted by - November 6, 2017

சைட்டம் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வை எதிர்த்து மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் சாகும் வரை உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்துள்ளது.குறித்த சங்கத்தின் 5 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் இவ்வாறு சாகும் வரை உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பேராசிரியர் ஹர்ச டி சில்வாவின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு சமர்ப்பித்த பரிந்துரைகளை செயற்படுவத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஒன்பது பேர் அடங்கிய குழுவில் சைட்டம் பிரதிநிதிகள் எவரும் இல்லை என சைட்டம் தலைவர் மருத்துவர் நெவில் பிரணாந்து தெரிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்பும் பணிகளை அரசாங்கம் மேற்கொள்கிறது- ஜனாதிபதி

Posted by - November 6, 2017

நாட்டை கட்டியெழுப்பவும் சிறார்களுக்கு சுபீட்சமான எதிர்காலம் ஒன்றை உருவாக்கவும் அரசாங்கம் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பயன்படுத்தும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தறை, தெய்யந்தர தேசிய பாடசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சிறுவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி சுபீட்சமானதொரு நாட்டைக் கட்டியெழுப்பவும் அரசாங்கம் தமது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல

இரணைமடு குளத்தினருகில் இருந்த முகாமிலிருந்து இராணுவம் வெளியேறியது

Posted by - November 6, 2017

குறித்த பகுதியில் முகாம் அமைத்திருந்த இராணுவம் அண்மையில் குறித்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். நீர்பாசண திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த பகுதியில் அமைந்திருந்த நீர்பாசண திணைக்களத்தின் விடுதிகளை (குவாட்டஸ்) தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதே வேளை குறித்த இரணைமடு குளத்திற்கு சுற்றுலாவாக வருகை தரும் பிரயாணிகளிற்கு சிற்றுண்டி சாலை அமைத்து வியாபாரமும் செய்து வந்த நிலையில் குறித்த முகாமிலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளது. இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் நிறைவடையும் நிலையில் குறித்த பகுதி நீர்பாசண

புதிதாக பத்து மேல் நீதிமன்றங்கள் நிறுவப்படும் !- அஜித் பெரேரா

Posted by - November 6, 2017

புதிதாக பத்து மேல் நீதிமன்றங்கள் நிறுவப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.

நூற்றுக்கணக்கான  குழந்தைகளின் கண்ணீருடன் விடைப்பெற்றார் இராசநாயகம்

Posted by - November 6, 2017

கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபரும் மகாதேவா சைவ சிறாா் (குருகுலம்)  இல்லத்தின் தலைவருமான அமரர் திருநாவுகரசு இராசநாயகத்தின் இறுதி நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. நுற்றுக்கணக்கான குழந்தைகள் கதறி அழ கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள  சிறுவா் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி உரைகள் இடம்பெற்று   பூநகரி மட்டுவில்நாடு  பொது மயானத்தில் இறுதி நிகழ்வு இடம்பெற்றது. அதிகாரிகள் அரசியல்  தரப்புக்கள்  பொது மக்கள் என ஏராளமானவா்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினாா்கள். அந்த  வகையில் பாராளுமன்ற உறுப்பினா்களான

பிடியாணை பிடிக்கப்பட்ட நிலையில் மறைந்திருந்த 12 பேர் கைது

Posted by - November 6, 2017

சாலியவெவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அவசர சோதனை நடவடிக்கையின் போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் மறைந்திருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 4 பெண்களும் அடங்குகின்றனர். 

ஊழல் புகாரில் சிக்கிய 3 இந்தியர்களை நாடு கடத்த இங்கிலாந்து மறுப்பு

Posted by - November 6, 2017

ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் வெளிநாடு வாழ் 3 இந்தியர்களை நாடு கடத்த இங்கிலாந்து கோர்ட்டுகள் மறுத்துவிட்டன.