டெங்கு நோய் காரணமாக 400 பேர் வரை மரணம்

Posted by - November 8, 2017

டெங்கு நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 400 பேர் வரையில் மரணித்துள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 502 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம், மட்டக்களப்பு, கல்முனை, கண்டி மற்றும் மாத்தறை போன்ற பிரதேசங்களில் டெங்குப் பரவல் அதிகம் உள்ள இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மறுசீரமைப்பு செயற்பாடுகள் மக்களுக்கு நன்மைப் பகிரும் வகையில் இல்லை- ஜப்பான்

Posted by - November 8, 2017

தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற மறுசீரமைப்பு செயற்பாடுகள், நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்மைப் பகிரும் வகையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானின் உச்ச நீதிமன்ற விசாரணையாளரும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பாதிக்கப்பட்டோருக்கான நம்பிக்கை நிதியத்தின் பணிபாளர் சபைத் தலைவருமான மொட்டு நொகுச்சி இதனைத் தெரிவித்துள்ளார். மறுசீரமைப்பு பொறிமுறைகள் அனைத்து சமுகத்துக்கும் நன்மை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும். ஆனால் தற்போது இலங்கையில் நடைபெறுபவை ஒரு சமுகத்தை மாத்திரம் இலக்கு வைத்து இடம்பெறுவதாக அமைகிறது என்று

நாட்டின் பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பான அறிக்கை

Posted by - November 8, 2017

நாட்டில் நிலவுகின்ற பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் அறிக்கை ஒன்றை கையளிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர், அரசாங்கம் முக்கியமான பல தீர்மானங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பெற்றோல் பற்றாக்குறை நாளையுடன் தீர்க்கப்படும் என்று, கனியவள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் ஏற்றிய கப்பல் ஒன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இதில் இருந்து நாளை முதல் பெற்றோல் விநியோகம்

சீனாவின் கடற்படை கப்பல் இலங்கை வருகை

Posted by - November 8, 2017

இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் போர்க்கப்பல்கள் இலங்கை வந்து திரும்பிய நிலையில், சீனாவின் கடற்படைக்கு சொந்தமான பயிற்சி கப்பலான க்யி ஜிகுயாங் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று இலங்கைக்கு வருகிறது. இந்த கப்பல் நான்கு நாட்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்து உட்பட்ட நான்கு நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தக்கப்பல் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வருகிறது. இந்தக்கப்பலில் 549 கடற்படை வீரர்கள் பயணம் செய்வதாக, சீனத் தூதரகத்தின் செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலிச்சித்திரக் கலைஞர் பாலா கைது ஜனநாயக விரோதமாகும்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 7, 2017

கேலிச்சித்திரக் கலைஞர் பாலா அவர்களை தமிழ்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளமையானது அப்பட்டமான ஜனநாயக விரோத செயற்பாடாகும். கந்துவெட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து என்பவரின் மனைவி மற்றும் குழந்தைகள் தமிழ்நாட்டில் உள்ள நெல்லை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக தனக்குள் ஏற்பட்டிருந்த ஆதங்கத்தை ஒரு படைப்பாளியாக வெளிப்படுத்திய பாலா அவர்களை கைது செய்துள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். தன்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை சாதாராண பொதுமகனாக கடந்து செல்லாது ஜனநாயகம் ஏற்று அங்கீகரித்திருக்கும் கருத்துரிமைத்

முச்சக்கரவண்டியொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

Posted by - November 7, 2017

மொரவக நகரின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியொன்றில் இருந்து கூரிய ஆயதமொன்று உள்ளிட்ட சில ஆயுதங்கள் காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன. மொரவக காவற்துறையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபரின் சிறப்பு திட்டத்திற்கு அமைவாக இன்று அதிகாலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது , குறித்த முச்சக்கரவண்டியில் இருந்து மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள்

நாடாளுமன்றில் அரசியல் கைதிகள் தொடர்பில் கோரிக்கை

Posted by - November 7, 2017

தமது கோரிக்கைகளை வலியுறுத்தி அநுராதப்புர சிறைச்சாலையில் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணையை வவுனியாவிற்கு மாற்றுவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, இந்த கோரிக்கையை நீதியமைச்சர் தலதா அத்துகொரலவிடம் முன்வைத்தார். சந்தேகத்துக்குரியவர்களின் வழக்கு தொடர்பில் பிரதான சாட்சிகள் இருவர் பாதுகாப்பு கருதி விடுத்த கோரிக்கைக்கு இணங்கவே குறித்த நீதி விசாரணை அநுராதப்புரத்திற்கு சட்டமா அதிபரினால் மாற்றப்பட்டதாக நீதியமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன்போது

இலங்கையில் 14 இலட்சம் மாணவர்கள் காலை உணவு உட்கொள்வதில்லை: ஆய்வில் தகவல்

Posted by - November 7, 2017

இலங்கையில் 14 இலட்சம் மாணவர்கள் காலை உணவு உட்கொள்வதில்லை என ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குடும்பங்களின் பொருளாதாரப் பிரச்சினை இதில் அதிகம் தாக்கம் செலுத்துவதாக ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. 2016 ஆம் ஆண்டு கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்களின்படி இலங்கையில் 10,162 பாடசாலைகளில் 41,43,330 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி அதாவது 14 இலட்சம் மாணவர்கள் காலை உணவு உட்கொள்வதில்லையென ஆய்வுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சுகாதார

இலங்கை மீதான அமெரிக்காவின் ஆதரவு

Posted by - November 7, 2017

தாமதங்களுக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படும் இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமரிக்காவின் அரசியல் விடயங்களுக்கான உதவி செயலாளர் தோமஸ் ஷெனொன் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு மாத்திரமன்றி, பிராந்தியத்தின் பாதுகாப்பு விடயத்திலும் இணைந்து செயற்பட அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் ஷெனொன் குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகள் இன்று இலங்கையை அவதானித்துக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் இலங்கையின் பயணத்துக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது. அத்துடன் இலங்கையின் பங்காளராக இருந்து தீர்வு விடயத்தை விரைவுப்படுத்த

1126 கோடி ரூபாய்க்கான குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு

Posted by - November 7, 2017

ஆயிரத்து 126 கோடி ரூபாய்க்கான குறை நிரப்பு பிரேரணையொன்று இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அரச நிறுவனங்களில் வேதனம்  , வௌ்ளப்பெருக்கு நிவாரணம் , அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் வௌிநாட்டு பயணங்களுக்கான நிதிஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கள் சில இந்த குறைநிரப்பு பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த குறை நிரப்பு பிரேரணையில் தொடர்சியான செலவீனங்களுக்காக 634 கோடி ரூபாயும் மற்றும் மூலதன செலவீனங்களுக்காக 492 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.