முச்சக்கரவண்டியொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

5811 26

மொரவக நகரின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியொன்றில் இருந்து கூரிய ஆயதமொன்று உள்ளிட்ட சில ஆயுதங்கள் காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மொரவக காவற்துறையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபரின் சிறப்பு திட்டத்திற்கு அமைவாக இன்று அதிகாலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது , குறித்த முச்சக்கரவண்டியில் இருந்து மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் மொரவக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a comment