தாமதங்களுக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படும் இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமரிக்காவின் அரசியல் விடயங்களுக்கான உதவி செயலாளர் தோமஸ் ஷெனொன் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு மாத்திரமன்றி, பிராந்தியத்தின் பாதுகாப்பு விடயத்திலும் இணைந்து செயற்பட அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் ஷெனொன் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகள் இன்று இலங்கையை அவதானித்துக்கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் இலங்கையின் பயணத்துக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது.
அத்துடன் இலங்கையின் பங்காளராக இருந்து தீர்வு விடயத்தை விரைவுப்படுத்த அமெரிக்கா விரும்புவதாகவும் ஷெனொன் குறிப்பிட்டுள்ளார்.