நீதிபதியைத் திட்டிய மூவர் கைது

Posted by - December 26, 2017

நுவரெலிய, ஹட்டன் மஜிஸ்ட்ரேட் சரவணராஜாவைத் திட்டிய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஜிஸ்ட்ரேட் சரவணராஜா ஏ-9 வீதியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது கடந்த 23 ஆம் திகதி இரவு அவரது வாகனத்தைத் தொடர்ந்து மற்றொரு வாகனத்தில் வந்த மூவர் நீதிபதியையும், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் ஏசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற இனந்தெரியாத நபர்கள் நேற்று கெகிராவ பொலிஸாரினால் நேற்று (25) நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

முரண்பட்டால் மஹிந்த ராஜபக்ஷ கட்சியிலிருந்து நீக்கப்படுவார் –அமரவீர

Posted by - December 26, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேறு ஒரு கட்சிக்கு தலைமைப் பொறுப்பினை வழங்கினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இழக்க வேண்டி ஏற்படும் என  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கைக்கு அமையவே அனைவரும் செயற்பட வேண்டும். அவ்வாறில்லாமல் செயற்பட்டால் ஒழுக்காற்று நட வடிக்கை எடுக்கவேண்டிவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகரும் சிரேஷ்ட உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட்டு எதிரணியின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின்

ரவி, அர்ஜூன் மகேந்திரன் கையெழுத்திட்டுள்ள நாணய தாள்கள் ரத்து செய்ய வேண்டும்-அநுர

Posted by - December 26, 2017

மத்திய வங்கியின் பிணை முறி விநியோகத்துடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கையெழுத்திட்டுள்ள நாணய தாள்களை, முறையான சட்டத்திட்டங்களுக்கு அமைய ரத்து செய்ய வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கையை விடுத்துள்ளார். பேராதெனியவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் – தேர்தல்கள் ஆணைக்குழுவினர் சந்திப்பு

Posted by - December 26, 2017

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நாளை இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பில் தேர்தல் சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கான சந்திப்பொன்று நாளை மறுதினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

மாயாஜாலங்கள் செய்து தினகரன் வெற்றி: முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் குற்றச்சாட்டு

Posted by - December 26, 2017

ஆர்.கே.நகரில் மாயாஜாலங்கள் செய்து டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளதாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், டிடிவி தினகரனும் ரகசிய உடன்பாடு வைத்து கூட்டுச் சதி

தினகரனால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்: ஆதரவாளர் புகழேந்தி கருத்து

Posted by - December 26, 2017

அதிமுக தொண்டர்கள் டிடிவிதினகரன் தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று அவரது ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் அதிமுகவின் தன்மானத்தை தினகரன் காப்பாற்றியுள்ளார். அதிமுகவில் இருந்து நான் உள்ளிட்ட சிலரை நீக்குவதாக அறிவித்துள்ளனர். தேர்தல் தோல்வியால் ஆளுங்கட்சியினர் பெரிய குழப்பத்தில் உள்ளனர். என்னை கர்நாடக மாநில அதிமுக பொறுப்பாளராக நியமித்தவர் ஜெயலலிதா. நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிப் பணியாற்றி வருகிறேன்.சசிகலா மற்றும் தினகரனால் மட்டுமே அதிமுகவை

நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் இளைஞன் முறைப்பாடு

Posted by - December 26, 2017

நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் இளைஞன் முறைப்பாடுபணம் வாங்கிவிட்டு நெல்லியடி பொலிஸார் பக்கசார்பாக நடந்து கொண்டதாக கூறி, பாதிக்கப்பட்டவரால் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கரவெட்டி – காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே, இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். கரவெட்டி – காட்டுப்புலம் பகுதியில், இளைஞன் ஒருவர், தனது இரு கைககளும் அடித்து முறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவரின் பெயர்

கடத்தப்பட்ட பெறுமதியான மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன

Posted by - December 26, 2017

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பெறுமதியான மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி – அக்கராயன்குளம் பிரதேசத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பெறுமதியான பால மரக்குற்றிகளுடன் சென்ற இரண்டு வாகனங்களை கிளிநொச்சி காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். நேற்று (25) அம்பாள்குளம் பிரதேசத்தில் வைத்து கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபரின் விசேட மது ஒழிப்பு பிரிவினரால் பால மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன. 12 பெறுமதியான பால மரக் குற்றிகள் கடத்தி வரப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உதவி காவல்துறை பரிசோதகர் பிரதீபன் மற்றும்

ஜனவரியில் நல்லிணக்க வாரம்-அரசாங்க தகவல் திணைக்களம்

Posted by - December 26, 2017

எதிர்வரும் ஜனவரி எட்டாம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரையான ஒரு வார காலம் நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சு நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தேசிய நல்லிணக்க வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது என, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான குறிக்கோள் சமாதானத்துடன் கூடிய வலுவான உரையாடல்கள் மாத்திரமின்றி, வளமிக்க தேசமொன்றை கட்டியெழுப்புவதற்கான பங்களிப்புக்களை ஊக்குவித்தல், மக்களிடையே சாந்தி, சமாதானம், அன்பு, கருணை மற்றும்

அம்பாறையில் தூக்கில் தொங்கிய நிலையில் 19 வயது இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - December 26, 2017

அம்பாறை சுதுவெல்ல பிரதேசத்தில் 19 வயது இளைஞன் ஒருவன் தூக்கில் தொங்கி, உயிரிழந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளான். அம்பாறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.