கூட்டு எதிர்க் கட்சியின் பிரச்சாரக் கூட்டம் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில்

Posted by - November 9, 2017

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் தேர்தலை மையப்படுத்திய பொதுக் கூட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் நடைபெறும் இக்கூட்டம் தொகுதி வாரியாக 20 கூட்டங்கள் நடாத்தப்பட்டதன் பின்னர் நடாத்தப்படும் பொதுக் கூட்டம் என முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்ஜித் சமரகோன் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள சகல கட்சிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்று தானும் தற்கொலை

Posted by - November 9, 2017

அனுராதபுரம் மதவாச்சி பகுதியில் தனது மனைவியை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்பத் தகறாரே இதற்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சம்பவத்தில் பலியானவர் மதவாச்சி – துடின்நேகம பகுதியைச் சேர்ந்த 43 வயதான பெண் எனவும், தற்கொலை செய்து கொண்டவர் 45 வயதான அவரது கணவர் எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பில் சுதந்திரமாக வசிக்கவில்லையா?

Posted by - November 9, 2017

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பில் சுதந்திரமாக வசிக்கவில்லையா?” எனக் கேள்வியொழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, “எங்களை விட அவருக்குச் சுதந்திரம் இருப்பதாகவே கருதுகிறேன்” என, நேற்று (08) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்துக்குக் குண்டு வைக்க வேண்டும் எனக் கூறிய விமல் வீரவன்ச, நாடாளுமன்றுக்கு வரும்போது, தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்”

Posted by - November 9, 2017

“நாடாளுமன்றத்துக்குக் குண்டு வைக்க வேண்டும் எனக் கூறிய விமல் வீரவன்ச, நாடாளுமன்றுக்கு வரும்போது, தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என, ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன, நேற்று (08) தெரிவித்தார்.

சுமந்திரனின் நோக்கத்தை நிறைவேற்றும் ‘சுரேஷ்’! -புருஜோத்தமன் தங்கமயில்

Posted by - November 9, 2017

எதிர்காலத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ், தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்- சுரேஷ் அணி) அறிவித்திருக்கின்றது.

அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது விடுதலைப் புலிகளுக்கு எனச் சிலர் நினைக்கின்றார்கள்!

Posted by - November 9, 2017

“அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது விடுதலைப் புலிகளுக்கு எனச் சிலர் நினைக்கின்றார்கள்.

2018 ஆம் ஆண்டுக்கான பாதீடு

Posted by - November 9, 2017

2018 ஆம் ஆண்டுக்கான பாதீடு, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. பிற்பகல் 3 மணியளவில் அமைச்சர் பாதீடு தொடர்பான உரையை நாடாளுமன்றத்தில் ஆற்றவுள்ளார். நிதி அமைச்சராக மங்கள சமரவீர பொறுப்பேற்றதன் பின்னர், அவர் முன் வைக்கும் முதலாவது பாதீடு இதுவாகும். அத்துடன் சுதந்திர இலங்கையின் 71வது பாதீடாகவும், தற்போதைய அரசாங்கத்தின் 3வது பாதீடாவும் இது அமையவுள்ளது. நாடாளுமன்றத்தில் பாதீடு வாசிக்கப்படும் போது, பொதுமக்கள் பார்வையாளர் அரங்கு முழுமையாக மூடப்பட்டிருக்கும். விசேட விருந்தினர்கள் மாத்திரமே

ஸ்பெயின் நாட்டின் சுதந்திரத்துக்கான கருத்துக் கணிப்பு

Posted by - November 9, 2017

ஸ்பெயின் நாட்டின் பிராந்தியங்கள் சுதந்திரத்துக்கான கருத்துக் கணிப்புகளை நடத்துவதற்கான வழிகளை அரசியல் யாப்பில் ஏற்படுத்த ஆலோசிக்கப்படுகிறது. அந்த  நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அல்ஃபொன்சோ டாஸ்டிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். கட்டலோனியா தன்னாட்சிப் பிராந்தியம் தனிநாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தோல்வி அடைந்த நிலையில், இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கட்டலோனியாவானது  ஒருதலைப்பட்சமாக கருத்துக் கணிப்பை நடத்தி, தனிநாடாக அறிவித்துக் கொள்ள முயற்சித்ததாலேயே அதனை தடுத்ததாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது.

பிரித்தானியா அமைச்சர் பதவி விலகல்

Posted by - November 9, 2017

பிரித்தானியாவின் மற்றுமொரு அமைச்சர் பதவி விலகியுள்ளார். பிரீத்தி பட்டேல் என்ற குறித்த அமைச்சர், இஷ்ரேலுடன் தொடர்பு கொண்டிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அவர் பதவி விலகி  இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த  ஆகஸ்ட் மாதம் அவர் தமது குடும்பத்தாருடன் தனிப்பட்ட விஜயமாக இஷ்ரேல் சென்று, அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு உள்ளிட்ட இஷ்ரேலிய உயர்மட்ட  அதிகாரிகளை சந்தித்துள்ளார். இது தொடர்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் பதவி விலகியுள்ளார்.

உணவு தவிர்ப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது

Posted by - November 9, 2017

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை  தடைசெய்ய வேண்டும் என கோரி அரச மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்த உணவு தவிர்ப்பு போராட்டம்  நேற்று இரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. அவர்களின் கோரிக்கை தொடர்பில் எழுத்து மூல மற்றும் வாய்மூல உறுதிமொழி, பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வாவினால், வழங்கப்பட்டது. இதனை அடுத்து அவர்களின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. கடந்த  6ஆம்  திகதி மாலை மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்தினால் உணவு தவிர்ப்பு போராட்டம்