ஹெரோயின் வைத்திருந்த ஐவருக்கு ஆயுள் தண்டனை

Posted by - November 9, 2017

6.5 கிராம் ஹெரோயினை வைத்திருந்த ஐவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம், ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 1996ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் திகதி கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சட்டமா அதிபரால் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வரவுசெலவு திட்டத்தில் இம்முறையும் கல்விக்கே அதிக நிதி ஒதுக்கீடு – மைத்ரிபால சிறிசேன

Posted by - November 9, 2017

தற்போதைய அரசாங்கமானது தனது அரச கொள்கையில் பிள்ளைகளின் கல்விக்கே அதிக முன்னுரிமை அளித்துள்ளதுடன் கடந்த வருடங்களைப் போன்றே இவ்வருட வரவுசெலவு திட்டத்திலும் கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளதென ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (09) முற்பகல் மொரட்டுவ பிரின்சஸ் ஒஃப் வேல்ஸ் வித்தியாலயத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டில் அதிகளவிலான கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் உருவாக்குவதே நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானதாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, கல்வி நடவடிக்கைகளில்

கீதா குமாரசிங்கவுக்கு பாராளுமன்றம் செல்ல முடியும்

Posted by - November 9, 2017

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கு பாராளுமன்றத்துக்கு செல்ல முடியாத வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய தடை விதித்திருப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என சபாநாயகர் ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீதா குமாரசிங்கவுக்கு சாதாரண பிரஜையாக பாராளுமன்றத்துக்கு செல்ல எந்தவித தடையும் இல்லை என அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களுடன் அவர் பாராளுமன்றத்துக்கு வருவதே தடை விதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இரட்டை பிரஜாவுரிமை காரணமாக கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற

மஹிந்த உள்ளிட்ட பா.உ சிலர் சைக்கிளில் பாராளுமன்றுக்கு வருகை

Posted by - November 9, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சைக்கிளில் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார். இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவிருக்கும் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கலந்துகொள்ளவதற்காகவே அவர்கள் இவ்வாறு வருகை தந்துள்ளனர். நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலேயே, கூட்டு எதிர்க்கட்சியினர் சைக்கிளில் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளனர்.

வடகொரியாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு சீனாவிடம் கோருகிறார் ட்ரம்ப் 

Posted by - November 9, 2017

வடகொரியா தமது அணு ஆயுத சோதனை நடவடிக்கைகளை கைவிடுமாறு சீனா வலியுறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார். நீண்ட நாள் பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆசியாவிற்கான தமது விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தமது முதல் பயணமாக அவர் ஜப்பான் சென்றிருந்தார். தற்போது அவர் சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், சீன ஜனாதிபதி சீ ஜிங்பிங்கை  சந்தித்துள்ளார். இதன்போது இருநாட்டு உறவுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

பாதீட்டுக்கு அமைச்சரவை அங்கிகாரம்

Posted by - November 9, 2017

2018 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. பிற்பகல் 3 மணியளவில் அமைச்சர் பாதீடு தொடர்பான உரையை நாடாளுமன்றத்தில் ஆற்றவுள்ளார். நிதி அமைச்சராக மங்கள சமரவீர பொறுப்பேற்றதன் பின்னர், அவர் முன் வைக்கும் முதலாவது பாதீடு இதுவாகும். அத்துடன் சுதந்திர இலங்கையின்  71வது பாதீடாகவும், தற்போதைய கூட்டரசாங்கத்தின்  3வது பாதீடாவும் இது அமையவுள்ளது. பாதீடு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதற்கு முன்னர் அதன் யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ளும் வகையில் சிறப்பு கூட்டம்

நாய்களால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு

Posted by - November 9, 2017

சீகிரிய சுற்றுலா பிரதேசத்தில் கட்டாகாலி நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால், சுற்றுலா தொழிற்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்த பிரதேசத்துக்குள் வருவதில் பெறும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் சுற்றுலா பயணிகள் மற்றும் வழிக்காட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீகிரிய புதிய நகர், பொது வாகன தரிப்பிடம் மற்றும் சீகிரிய மகா வித்தியாலயம் உள்ளிட்ட பல பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாது விடத்து சுற்றுலா தொழிற்துறை பெரிதும் பாதிக்கப்படும்

கப்பலில் வந்த எரிபொருள் தொடர்பில் ஆராய்வு

Posted by - November 9, 2017

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள் தற்போது பரிசோதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கை இன்று மதியம் கிடைக்கும் என எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சஞ்ஜீவ விஜேரத்ன தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கை கிடைத்தவுடன், முத்துராஜவெல களஞ்சிய சாலையில் இருந்து பெற்றோலை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும் என அவர் தெரிவித்தார். கடந்த மாதம்  17ஆம் திகதி எல்.ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட எரிபொருள் தரம் குறைந்தது

கரிய முத்துகளுடன் ஒருவர் கைது

Posted by - November 9, 2017

மிஹிந்தலை பிரதேசத்தில்  3 கரியமுதுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கைதானவர் 32 வயதுடைய ராஜாங்கனய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இலங்கையில் இன்றும் மழை 

Posted by - November 9, 2017

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைபெய்யும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் எதிர்வரும் 24 மணித்தியாளங்களில் 75 முதல் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டை சூழவுள்ள கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர்