நாட்டில் இரண்­டா­யிரம் பேர் தல­சீ­மியா நோயினால் பாதிப்பு

Posted by - November 14, 2017

நாட­ளா­விய ரீதியில் தல­சீ­மியா நோயி னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் சுமார் 65 வீத­மா­ன­வர்கள், தல­சீ­மியா நோய்த்­தாக்­கத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக ராகம வைத்­தியசாலையின் வைத்­திய ஆலோ­சகர் பேரா­சி­ரியர் அனுஷ பிரே­ம­வர்­தன தெரி­வித்­துள்ளார். தல­சீ­மியா நோயின் பிர­தான அறி­கு­றி­க­ளுடன், குரு­நாகல் வைத்­தியசாலையில் மாத்­திரம் சுமார் ஆயிரம் நோயா­ளர்­க­ளுக்கும் மேற்­பட்டோர் தற்­போது  அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் பேராசிரியர் குறிப்­பிட்­டுள்ளார். இலங்­கையில் தலசீமியா நோயினால் சுமார் இரண்­டா­யி­ரத்­துக்கும் மேற்­பட்டோர் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க வும், ஆனால் இந்­நோய்க்குத் தேவை­யான  உரிய சிகிச்­சை­களை உடன் பெற்றுக் ­கொள்­வதன் மூலம் தல­சீமியா நோய்த்­தாக்­கத்­தி­லி­ருந்து தம்மைப்

முஸ்லிம் சமூ­கத்தின் முதுகில் நிரந்­தர அடி­மைச்­சா­சனம் எழு­தப்­படும் அபாயம்-ரிஷாத் பதி­யுதீன்

Posted by - November 14, 2017

புதிய அர­சியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூ­கத்தின் முதுகின் மீது நிரந்­த­ர­மான அடிமைச் சாச­ன­மொன்று எழு­தப்­படும் அபாயம் இருப்­ப­தாக அஞ்­சு­கிறோம் என்று அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். பெண் எழுத்­தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீ.பி. எழு­திய “நான் மூச்­ச­யர்ந்த போது” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வத்­தளை ஹூணுப்­பிட்டி சாஹிரா மகா வித்­தி­யா­ல­யத்தில் நேற்றுமுன்தினம் நடை­பெற்றது. அந் நிகழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு எச்­ச­ரிக்கை விடுத்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

16 மாணவர்கள் திடீர் சுகயீனம் – வைத்தியசாலையில் அனுமதி

Posted by - November 14, 2017

சியாம்பலாண்டுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட மொனராகலை – பல்லேவலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 16 பேர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த தலைமைத்துவப் பயிற்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மாணவர்களே இவ்வாறு சுகயீனமடைந்துள்ளனர். சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை, ஆறு மாணவர்கள் மற்றும் 10 மாணவிகளும் இவ்வாறு சுகயீனமடைந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டனர். இது தொடர்பில் கொவிதுபுர பொலிஸாரால் சியாம்பலாண்டுவ பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டு

நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை விற்கப்பட்டு விட்டது – விஜயகலா மகேஸ்வரன்

Posted by - November 14, 2017

நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை , சட்டத்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியன விற்கப்பட்டு உள்ளது. என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த சந்திப்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில். நீதித்துறை , ஊடக துறை , சட்டத்துறையும் விற்கப்படுகின்றது. இந்த ஜனநாயக நாட்டில் நல்லாட்சி நிலவும் காலத்தில் அவை விற்கப்பட்டு உள்ளது. ஒரு சில பொறுப்பு உள்ள அதிகாரிகளால் தான்

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை – TNA

Posted by - November 14, 2017

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தீர்க்கமான ஓர் முடிவை எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனம் குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பில் விரிவாக கட்சி ஆராய்ந்து வருவதாகவும், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும்

பௌத்த தேரராக மாறியுள்ள மொஹமட் சமீர் சுஹைர் எனும் சிறுவன்

Posted by - November 14, 2017

மொஹமட் சமீர் சுஹைர் எனும் 10 வயது சிறுவன் பௌத்த மத சங்க சமூகத்தில் தேரராக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரிய மதின்னாகொடயைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு மதம் மாறியுள்ளார். அரநாயக்க மோராகம்மன ஸ்ரீ மயுரபாத ரஜமஹா விகாரையில் வைத்து ராஜகிரியே சந்தகித்தி தேரர் என தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு ஏப்றல் மாதம் 12 ஆம் திகதி பொரல்ல காசல் வைத்தியசாலையில் பிறந்த இவரின் தந்தை ஒரு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முஹம்மட்

ஓரிரு வாரத்தில் அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ள ஐவர் ?

Posted by - November 14, 2017

அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல அமைச்சர்கள் ஐவர் அடுத்து வரும் வாரங்களில் எதிர்க் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருவரும், பிரதி அமைச்சர்கள் இருவரும் ஒரு இராஜாங்க அமைச்சரும் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், நான்கு கட்டங்களில் இந்த அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டும் வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு அரசாங்கத்திலிருந்து விலகவுள்ளவர்கள் கடந்த காலங்களில் கூட்டு எதிர்க் கட்சியையும் ஸ்ரீ

மங்களவின் பியர் யோசனைக்கு ராஜித கடும் எதிர்ப்பு

Posted by - November 14, 2017

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் பியர் யோசனைக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்த யோசனையை மாற்றிக் கொள்ள வேண்டும் என நிதி அமைச்சரிடம் வரவு செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் ராஜித நேற்று (13) வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் சட்ட விரோத மதுபாவனை அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து தவறான புள்ளிவிபர தரவுகளின் அடிப்படையில் பெறப்பட்ட ஒன்று எனவும், பியர் விலை குறைப்பானது

நீரிழிவு நோயாளர்களுக்கு தேசிய கண் சிகிச்சைப் பிரிவின் அறிவிப்பு

Posted by - November 14, 2017

நீரிழிவு நோயாளிகளின் கண்பார்வையைப் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 8.00 மணி முதல்  மதியம்  1.00 மணி வரையில் கொழும்பு தேசிய  வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் இலவசமாக கண் பரிசோதனை முகாமொன்று இடம்பெறவுள்ளதாக கண் சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது. உலக நீரிழிவு நோயாளர்கள் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சிகிச்சை நடவடிக்கை விசேடமாக சாரதிகளை இலக்குவைத்து முன்னெடுக்கப்படுவதாகவும் அப்பிரிவு கூறியுள்ளது. நீரிழிவு நோயினால் ஏற்படும் பார்வை இழப்பைத் தவிர்ந்து

அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சவில்லை – ஹிஸ்புல்லாஹ்

Posted by - November 14, 2017

“அரசாங்கம் தேர்தலுக்கு பயந்து தேர்தலைப் பிற்போடுவதாக எதிரணியினர் குற்றம்சாட்டுகின்றனர். அவ்வாறு அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ தேர்தலை நடத்துவதில் எந்த அச்சமும் கிடையாது. புதிய தேர்தல் சட்டத்தில் உள்ள சட்டசிக்கல்கள் காரணமாகவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது” என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் ஏறாவூரில் உள்ள சமூக நிறுவனங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று