மங்களவின் பியர் யோசனைக்கு ராஜித கடும் எதிர்ப்பு

223 0

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் பியர் யோசனைக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இந்த யோசனையை மாற்றிக் கொள்ள வேண்டும் என நிதி அமைச்சரிடம் வரவு செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் ராஜித நேற்று (13) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் சட்ட விரோத மதுபாவனை அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து தவறான புள்ளிவிபர தரவுகளின் அடிப்படையில் பெறப்பட்ட ஒன்று எனவும், பியர் விலை குறைப்பானது பாடசாலை மாணவர்கள் மதுப் பாவனையின் பால் தூண்டப்படுவதற்கு காரணமாக அமைந்து விடும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment