மனைவியை அடித்து உதைத்த எம்.பி. கைது
அமெரிக்காவில் துப்பாக்கியை காட்டி மிரட்டி மனைவியை அடித்து உதைத்ததாக அமெரிக்க எம்.பி கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் துப்பாக்கியை காட்டி மிரட்டி மனைவியை அடித்து உதைத்ததாக அமெரிக்க எம்.பி கைது செய்யப்பட்டார்.
அரிமளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் உட்பட 2 பேர் இறந்தனர்.
காதலிக்க மறுத்ததால் பேராசிரியையை கொன்று விட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டேன் என்று கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘அடிமைப் பெண்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகியப் படங்கள் சிறப்பு பிரிவின்கீழ் திரையிடப்படுகின்றன.
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தொழில்களை மேற்கொள்வதற்கான இயல்பு நிலையை ஏற்படுத்தித்தரவேண்டும் என முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் நல்லதண்ணீர்த்தொடுவாய் முதல் பேய்ப்பாறைப்பிட்டி வரைக்குமான சுமார் 73 கிலோமீற்றர் நீளமான கரையோரப்பகுதிகளைக் கொண்ட கடற்பகுதிகளிலும் நாயாறு வட்டுவாகல் ஆறு உள்ளிட்ட சிறுகடல் பகுதிகளிலும் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தொழிலான கடற்றொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், “வட்டுவாகல் ஆறு கொக்கிளாய் ஆறு ஆகிய சிறுகடல் பகுதிகளில் அனுமதியற்ற சட்டவிரோத தொழில்கள் மேற்கொள்ளப்படுவதனால்
புது வருட தினத்தில் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களில் காயமடைந்த 497 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இவர்களுள் 179 மருத்துவமனையில் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாக கொழும்பு தேசிய மருத்துவமனை தெரிவித்துள்ளது. எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், புதுவருடத்தில் தேசிய மருத்துமனையில் பதிவாகியுள்ள விபத்துக்களின் எண்ணிக்கை 13 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வீதி விபத்துக்களின் காரணமாக நேற்றை தினம் மாத்திரம் 7 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு, ‘முள்ளிவாய்க்கால்’ என்ற சொற் பிரயோகங்கள் சர்வதேச சமூகத்தினாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மாகாண சபை உறுப்பினர்களால் தமது சுய லாபங்களுக்காகப் பயனப்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதிஸ்ட லாபச் சீட்டுக்களின் விலையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கலந்துரையாடவுள்ளதாக விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதிஸ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கிரிஸாந்த மாரம்பகே தெரிவித்தார். அதிஸ்ட லாபச் சீட்டுக்களின் விலையை 20 ரூபாவிலிருந்நது 30 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு அதிஸ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனையாளர்கள் நேற்று பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிஸ்ட லாபச் சீட்டுக்களின் விலையை அதிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விற்பனையாளர்கள்