226 கோடி ரூபா வருமானம் ஈட்டிய கடற்படை
2016ம் ஆண்டில் கரையோரப் பாதுகாப்பு பணி நடவடிக்கைகள் மூலம் 226 கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.
2016ம் ஆண்டில் கரையோரப் பாதுகாப்பு பணி நடவடிக்கைகள் மூலம் 226 கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.
தேசிய லொத்தர் சபையினால் வெளியிடப்படும் லொத்தரின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து லொத்தர் விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நெல் விநியோகத்தின் போது ஆலை உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டதாக சிலர் தன்மீது குற்றம் சுமத்துவதாகவும், தான் அவ்வாறு நடந்து கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பி ஹாரிசன் கூறினார்.
கடந்த அரசாங்கம் கட்டுமான நடவடிக்கைகள் மூலம் திருடியதாகவும், தற்போதைய அரசாங்கம் விற்பனை மூலம் திருடுவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறினார்.
ஹொரவப்பொத்தானையில் கடந்த டிசெம்பர் 31ஆம் திகதி கலகம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 16 சிறீலங்கா இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஜனாதிபதியிடம் தெரிவிக்க செயற்றிட்டத்தின் பிராந்திய அலுவலக திறப்பு நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதியின் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிராந்திய அலுவலகம் நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவிருந்தது. இந்தநிலையிலேயே குறித்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஊடகவியலாளரின் வீட்டில் நள்ளிரவில் புகுந்த திருடர்கள் பணம், நகை என்பவற்றை கொள்ளையிடடுச் சென்றுள்ளனா். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசித்து வரும் சுயாதீன ஊடகவியலாளா் ஒருவரின் வீட்டிலேயே திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தினத்தன்று வீட்டில் உள்ளவா்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது சமையலறை புகை கூட்டின் ஊடாக வீட்டிற்குள் இறங்கிய திருடர்கள் அறை ஒன்றினுள் இருந்த அலுமாரியில் வைத்திருந்த பதினைந்து பவுனுக்கு மேற்பட்ட நகைகள் மற்றும் அறுபதாயிரம் ரூபா
வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி வாகனமொன்றில் கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகுதி சாராயம் மாங்குளம் காவல்துறையினரால் இன்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரமின்றி வாகனமொன்றில் மறைத்து எடுத்துச்செல்லப்பட்ட அரச முத்திரை பொறிக்கப்பட்ட 750 மில்லிலீட்டர் அளவுடைய 84 போத்தல்களும் 180 மில்லிலீட்டர் அளவுடைய 64 போத்தல்களும் தென்னம்சாராயம் 4 மற்றும் Bule safari 2 ஆகியவையே கைது செய்யப்பட்டுள்ளது வீதிச்சோதனையில் இருந்த மாங்குளம் காவல்துறையினர் குறித்த வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது மேற்குறித்த சாராய வகைகள் கண்டுபிடிக்கப்பட்டு வாகனத்துடன் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட
அடங்காப்பற்றின் இறுதிமன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை மல்லாவி நகரில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் எட்டு சிலைகளில் ஒன்றாக மல்லாவி நகரின் மத்தியில் மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக உலகத்தமிழர் பண்பாட்டு பேரவையின் தலைவர் வி .எஸ் துரைராஜா கலந்துகொண்டு திருவுருவச்சிலையை திறந்து வைத்தார்.
யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விளம்பரம் ஒட்டுவதற்குரிய பகுதிகளில் மாத்திரம் விளம்பரங்கள், சுவரொட்டிகளை ஒட்ட முடியும் என யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார். சுவரொட்டிகளை சொந்த மதில்களில் காட்சிப்படுத்துவதற்கு தடைகள் இல்லை என்றும், ஆனால் மற்றறையவர்களின் ஆதனங்களில் காட்சிப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மாநகரசபை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதனை மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் அறிவித்துள்ளார்.