ஒன்றிணைந்த எதிர்கட்சி முறைப்பாடு

Posted by - January 4, 2017

ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றிடம் கையளிக்கும் போது அரச நிதியை முறைகேடான வகையில் பயன்படுத்தியதாக கூறி ஒன்றிணைந்த எதிர்கட்சி இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது. கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவில் இது தொடர்பான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் ஆகியோருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்த

பாகிஸ்தானின் இரண்டு கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன

Posted by - January 4, 2017

பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு கப்பல்களான ஹிங்கோல் மற்றும் பெசோல் என்ற இரண்டு கப்பல்களும் இலங்கைக்கு வருகை தரவுள்ளன. பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு கப்பல்களான ஹிங்கோல் மற்றும் பெசோல் என்ற இரண்டு கப்பல்களும் நான்கு நாட்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு நாளை கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதரவுள்ளன. இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாகிஸ்தானின் இரு கடல் கப்பல்களும் கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதருகின்றன. பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அஷ்பாக் அலி, இலங்கையின் கடற்படை, கரையோரப்

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய எதிர்ப்பு நடவடிக்கை

Posted by - January 4, 2017

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய எதிர்ப்பு நடவடிக்கை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் உட்பட பொதுச் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய எதிர்ப்பு நடவடிக்கை கொழும்பில் இன்று ஆரம்பமானது. புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் 10 மணிக்கு, மக்களை விழிப்புணர்வூட்டும் துண்டுப் பிரசுரங்கள் மக்கள் விடுதலை முன்னணியினரால் விநியோகிக்கப்பட்டன. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், எதிர்கட்சியின்

தொடரூந்தில் வெடிகுண்டு புரளி – கைது செய்யப்பட்ட யுவதி பிணையில் செல்ல அனுமதி

Posted by - January 4, 2017

தொடரூந்தில் வெடிகுண்டு ஒன்று இருப்பதாக காவற்துறைக்கு அழைப்பினை ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யுவதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட யுவதி இன்று கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார். இதன்போது, அவரை இரண்டு லட்சம் ரூபா வீதம் இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் குறித்த யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கவிருந்த

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும்,  லண்டன் மாநகரின் பாராளுமன்ற குழுக்களின் இலங்கைக்கான தலைவர் லோட் நசெபிக்கும் இடையில் சந்திப்பு (காணொளி)

Posted by - January 4, 2017

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் லண்டன் மாநகரின் அனைத்து கட்சிகளின் பாராளுமன்ற குழுக்களின் இலங்கைக்கான தலைவர் லோட் நசெபி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்று வரும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள், எதிர்கால வேலைத்திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விடயங்கள் என்பன கலந்துரையாடப்பட்டன. மீள்குடியேற்றம், யுத்தம் காரணமாக வெளிநாடுகளிற்கு இடம்பெயர்ந்து வாழும் புலம்பெயர்மக்கள், சட்ட விரோத வெளிநாட்டுப்பயணங்கள், போதைப்பொருள் கடத்தல்

ட்ரம்ப்பின் பதவியேற்பு நிகழ்வில் பற்கேற்கிறார் ஹிலாரி

Posted by - January 4, 2017

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதாக ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தோல்வியடைந்தார். இந்த நிலையில், அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், இந்த மாதம் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். இந்த நிகழ்வில் பங்கேற்பதாக ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார். இதேவேளை, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளிண்டன், ஜோர்ஜ் டபிள்யு புஷ் ஆகியோர் குறித்த

திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின்

Posted by - January 4, 2017

திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவராக திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவதாக திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் இன்று பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. பொதுக்குழுக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழுக் கூட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல்தலைவராக

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!-போதிய நிறையின்மை காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன

Posted by - January 4, 2017

வவுனியா வைத்தியசாலையில் பெண்ணொருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பிர சவத்திருந்த நிலையில் அவை போதிய நிறையின்மை காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன.

பிலிப்பைன்ஸ் சிறையிலிருந்து 150 கைதிகள் தப்பியோட்டம்

Posted by - January 4, 2017

பிலிப்பைன்ஸில் சிறைச்சாலை ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக சுமார் 150 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இஸ்லாமிய போராளிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில், ஒரு சிறை அதிகாரியும், ஒரு கைதியும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் ஆயிரத்து 511 கைதிகள் உள்ளதாகவும், அவர்களுள் 158 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் சிறைச்சாலை காவலாளி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தப்பிச் சென்ற

ஜனாதிபதிக்கும் சு.க அமைச்சர்களுக்கும் இடையில் சந்திப்பு

Posted by - January 4, 2017

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றுள்ளது. சமகால அரசியல் நிலைவரம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு மற்றும் அடுத்த தேர்தல்கள் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதியமைச்சர் நிஷாந்த முத்தெட்டிகம தெரிவித்துள்ளார்.