கிளிநொச்சி நகரின் பல இடங்களிலும் துண்டு பிரசுரங்கள் (காணொளி)

Posted by - January 6, 2017

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பூர்வீக இடங்களை துண்டுப்போடுவதற்கு வாக்களிக்க கூடாது எனவும் அவ்வாறு வாக்களித்தால் போர்ச் சூழல் உருவாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து துண்டு பிரசுரங்கள் கிளிநொச்சி நகரின் பல இடங்களிலும் நேற்று இரவுவேளை இனம்தெரியாத நபர்களினால் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படும் அரசியல் தலைமைகளை எச்சரித்து இந்த துண்டுபிரசுரம் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லினை நேற்று மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள்

தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை(காணொளி)

Posted by - January 6, 2017

தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது நடாத்தி வருகின்றனர். கொழும்பில் இந்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2016ஆம் ஆண்டின் இறுதிக்குள் தமிழர்களுக்கான தீர்வுத்

வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபம் இன்று திறந்து வைக்கப்பட்டது (காணொளி)

Posted by - January 6, 2017

வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலத்தின் பிரதான மண்டபம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்தினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது வித்தியால அதிபர் கி.நந்தபாலன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில், விருந்தினர்கள் பாண்ட் வாத்தியங்கள் சகிதம் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து, மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் கே.ராதாகிருஸ்ணன், வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராசா, மற்றும்

பண்டத்தரிப்பு சாந்தையில் இரு குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு(காணொளி)

Posted by - January 6, 2017

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்பு சாந்தையில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். வாள்வெட்டுச்சம்பத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் 5 பேர் கைது செய்யப்பட்டு இன்றையதினம் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் யூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக இளவாலை பொலிசார் தெரிவித்தனர். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் பண்டத்தரிப்பு சாந்தைப்பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான 37

தாஜூடினை பின் தொடர்ந்த நபர் சிக்கினார்

Posted by - January 6, 2017

வசிம் தாஜூடினின் கொலை இடம்பெற்ற போது அவரது வாகனத்தின் பின் இருக்கையில் சென்ற நபரை அடையாளம் கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

மைத்திரி தீர்மானத்தினால் மீள்குடியேற்றத்திற்கு தடையில்லை!

Posted by - January 6, 2017

வில்பத்து வனவிலங்குகள் சரணாலயம் சம்பந்தமாக ஜனாதிபதி அண்மையில் மேற்கொண்ட தீர்மானமானது போரில் பாதிக்கப்பட்ட மக்களை அங்கு குடியேற்றுவதில் எந்த தடையையும் ஏற்படுத்தாது என அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியை தோற்கடிக்க ஜே.வி.பி தயார்!

Posted by - January 6, 2017

நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவரவுள்ள அழிவை ஏற்படுத்தும் பொருளாதார கொள்கையை தோற்கடிக்க தாம் தயார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கூட்டு எதிர்க் கட்சியினர் ஊடகங்கள் மூலமாக ஆட்சியை கவிழ்க்க முயற்சி

Posted by - January 6, 2017

கூட்டு எதிர்க் கட்சியினர் ஊடகங்கள் மூலமாக ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கின்றனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வாழ்க்கை என்பது நடமாடும் நரக வாழ்க்கை!

Posted by - January 6, 2017

வெளிநாட்டு வாழ்க்கை என்பது சொல்வதற்கு பெருமைக்குரிய விடயம், ஆனால் உண்மையில் அது ஒரு நரக வாழ்க்கை, நடமாடும் நரக வாழ்க்கைதான் வெளிநாட்டு பயணம். என வெளிநாட்டு பயணத்தினால் பெரும் துன்பத்திலிருந்து மீண்டு வந்துள்ள பெண்கள் சங்கம் தெரிவித்துள்ளது.