யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்காக மூவாயிரத்து தொளாயிரத்து எழுபத்தைந்து கல்வீடுகள்- அரசாங்க அதிபர் (காணொளி)
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 2016 ஆம் ஆண்டில் 7 ஆயிரத்து எழுநூற்று இருபத்து நான்கு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு 99 தசம் 45 வீத பணம் வேலைத்திட்டங்களில் செலவுசெய்யப்பட்டுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொர்பாக இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்காக மூவாயிரத்து தொளாயிரத்து எழுபத்தைந்து கல்வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட

