வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு
பரசங்கசாகஹவெவ – மதவாச்சிக்கு இடையிலான ரயில் பாதையில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதால் வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 08.45 அளவில் ரஜரட்ட ரெஜின என்ற ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக, ரயில்வே தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதனால், இன்று காலை 05.10க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருத்த ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், மதவாச்சியில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருந்த ரயில் சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும், 05.45க்கு கல்கிசையில் இருந்தும் 08.50க்கு கொழும்பு

