அமைச்சரவைக் கூட்டத்தில் அர்ஜுன மீது அமைச்சர்கள் பாய்ச்சல்

253 0

தேவையான அளவு பெற்றோலை கையிருப்பில் வைத்திருக்காமையே நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி நிலைமைக்குக் காரணம் என நேற்று (14) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது சம்பந்தப்பட்ட அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் மீது அமைச்சர்கள் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

பெற்றொல் தட்டுப்பாட்டுக்கான முழுமையான பொறுப்பை அர்ஜுன ரணதுங்க ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுக்கவுள்ள நிலையில் அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த எரிபொருள் நெருக்கடி காணப்பட்டது. இதனால், அரசாங்கத்திலுள்ள கட்சிகள் பலதும் தேர்தலில் வாக்குக் கேட்பதற்கு மக்களைச் சந்திக்க சங்கடப்படும் நிலைமைக்கு இந்தப் பெற்றோல் நெருக்கடி காரணமாக அமைந்துள்ளமையே அமைச்சர்களின் கோபத்துக்கு காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

Leave a comment