இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியா செல்லவுள்ளார்
வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர பிரித்தானியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா செல்லும் அவர் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் அங்கு தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பிரதமராக தெரேசா மே தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியாவுக்கான உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்வது இதுவே முதல்முறை. பிரித்தானியா செல்லும் இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தமது விஜயத்தின் போது, அந்த

