இசைமேதை அமரதேவ பெயரில் சங்கீத கல்லூரி அமைக்க நடவடிக்கை
எதிர்கால பரம்பரைக்காக சங்கீத கல்லூரியை ஆரம்பிக்குமாறு அமரர் இசைமேதை கலாநிதி அமரதேவ மறைவதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய சங்கீத கல்லூரியை நிர்மாணிப்பது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

