தமிழ் மக்களை அழிக்கும் செயற்பாடுகளில் வேற்று இனத்தவர்கள் தீவிரம்

265 0

unnamed-151-720x450தமிழ் மக்களையும் தமிழையும் பாதிக்கின்ற செயற்பாடுகளிலும் அதனை அழிக்க வேண்டும் என்ற செயற்பாடுகளிலும் வேற்று இனத்தவர்கள் மிகவும் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

பாண்டிருப்பு அகரம் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் செ.துஸ்யந்தனின் படைப்பில் விருந்து எனும் நூல் வெளியீடு நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை கல்முனை தமிழ் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்அவர் , “பாரதியார் கூறிய படி தமிழர்கள் எட்டுத் திசைகளுக்கும் சென்று தமிழையும் தமிழர்களது கலை, கலாச்சார, பண்பாடு என்பனவற்றையும் எடுத்துச் சென்று மற்றவர்களுக்குச் சொல்லி நிலை நிறுத்த வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கின்றது தமிழ் மொழியானது மிகவும் செம்மையானதும் முதுமையானதுமான மொழியாக இருப்பதனால் அதனை பாதுகாக்க வேண்டியது எமது அனைவரினதும் ஒட்டுமொத்த தலையாய கடமையாகவும் இருக்கின்றது.

விசேடமாக எமது ஈழத்து மண்ணிலே வடகிழக்கு மாகாணங்களிலே வாழ்கின்ற எமது தமிழர்கள் தமிழ் கலாச்சாரங்களை பின்பற்ற வேண்டும் மாறாக மேலைத்தேய கலை கலாச்சாரங்களுக்குள் தங்களை ஈடுபடுத்தாமல் எமது கலாச்சாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழப்பழகிக் கொள்வதுடன் அனைவரும் விளிப்பாக இருந்து செயற்பட வேண்டும்.

மிகவும் பழமையானதும் முதன்மையானதுமான மொழி தமிழ் மொழியே ஆகும். இந்த மொழி அருகிப் போகக் கூடாது என்ற காரணத்தினால்தான் ரஷியாவின் மாளிகையில் கூட தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டிருக்கின்றது

அவ்வாறு மிகவும் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியினைப் பேணிப் பாதுகாத்து எமது அடுத்த சந்ததியினருக்கு கடத்த வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.