சட்டம் ஒழுங்கு அமைச்சு பொலிஸ் திணைக்களத்தினூடாக ஊடகங்களுக்கு செய்தி வெளியிடுவது தொடர்பில் சில வரையறைகளை விதிப்பு

Posted by - January 11, 2017

பொலிஸ் திணைக்களத்தினூடாக ஊடகங்களுக்கு செய்தி வெளியிடுவது தொடர்பில், சட்டம் ஒழுங்கு அமைச்சு சில வரையறைகளை விதித்துள்ளது. எதிர்காலத்தில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவே தகவல்கள் வெளியிடப்பட இருப்பதால் இதற்கு ஊடகங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. பொலிஸ் ஊடக கொள்கை வெளியிடும் நிகழ்வு நேற்று சட்டம் ஒழுங்கு அமைச்சில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஜகத் விஜேவீர, ஊடகங்களுக்கு செய்திகளை முறையாக அனுப்பவே புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கல்ல எனவும் தெரிவித்தார். கொள்கை

இலங்கையில் பலஸ்தீன தூதரக கட்டடம் நிர்மாணிப்பதற்காக காணியை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - January 11, 2017

இலங்கையில் பலஸ்தீன தூதரக கட்டடம் நிர்மாணிப்பதற்காக காணியை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த யோசனைக்கே, குறித்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு 07 ஹேவா அவெனியூவில் இதற்கான காணி ஒதுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

அமெரிக்க தேவாலயத்தில் 9 கறுப்பின மக்களைக் கொலை செய்த வெள்ளை இன நபருக்கு மரண தண்டனை

Posted by - January 11, 2017

அமெரிக்க தேவாலயத்தில் 9 கறுப்பின மக்களைக் கொலை செய்த வெள்ளை இன நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநில தேவாலயமொன்றில், கறுப்பின மக்கள் 9 பேரை இன ரீதியாக கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பாக, வெள்ளை இனத்தை சேர்ந்த மேலாதிக்கவாதி ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டில், தேவாலயத்தில் இருந்த ஒரு பைபிள் ஆய்வு குழுவின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய டைலன் ரூஃ ப் என்ற குறித்த நபர்

யாழ்ப்பாணத்தில் களவாடப்பட்டு பொலிஸாரால் மீட்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகளை உரியவர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் (காணொளி)

Posted by - January 11, 2017

யாழ்ப்பாணத்தில் களவாடப்பட்டு பொலிஸாரால் மீட்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகளை உரியவர்கள் அடையாளம் காட்டி நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். பொலிஸாரால் மீட்கப்பட்ட 86 துவிச்சக்கரவண்டிகளும் தற்போது யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வளாகத்தினுள் வரிசைப்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டள்ளன. துவிச்சக்கரவண்டிகளை களவுகொடுத்தவர்கள் துவிச்சக்கரவண்டிகளை பார்வையிட்டு அடையாளப்படுத்தி யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண

யாழ்ப்பாணம் நல்லூர் பின்வீதியில் விபத்து(காணொளி)

Posted by - January 11, 2017

யாழ்ப்பாணம் நல்லூர் பின்வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிப்பர் இன வாகனம் ஒன்று மோதியதில் பெண் ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நுவரெலிய மாவட்டம் அக்கரப்பத்தனை கிளாஸ்கோ ஆகுரோவா தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (காணொளி)

Posted by - January 11, 2017

நுவரெலிய மாவட்டம் அக்கரப்பத்தனை கிளாஸ்கோ ஆகுரோவா தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தின் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கூட்டு ஒப்பந்த புதிய சம்பளம் அடிப்படையில் திறன் கொடுப்பனவு 140 ரூபாவை தமது சம்பள பற்றுச்சீட்டில் உள்ளடக்க மறுத்தமையினால், அக்கரப்பத்தனை  கிளாஸ்கோ ஆகுரோவா தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தின் தொழிலாளர்கள் 100ற்கும் மேற்பட்டோர் இன்று டயகம தலவாக்கலை பிரதான வீதியின் ஆகுரோவா சந்தியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட பொழுது திறன் கொடுப்பனவு என

எதிர்வரும் தேர்தல் காலத்தில் பெண்களின் பங்களிப்பினை உறுதிப்படுத்தும் கட்சிகளுக்கே வாக்களிக்கவேண்டும்- திருமதி செல்வி.மனோகர்(காணொளி)

Posted by - January 11, 2017

  மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் தேர்தல் காலத்தில் பெண்களின் பங்களிப்பினை உறுதிப்படுத்தும் கட்சிகளுக்கே வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி திருமதி செல்வி.மனோகர் தெரிவித்தார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியின் மத்திய குழு கூட்டம் இன்று வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் மகளிர் அணித்தலைவி திருமதி செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கால்கோள் விழா(காணொளி)

Posted by - January 11, 2017

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கால்கோள் விழா இன்று தென்மராட்சி வலயத்தில் நடைபெற்றது. தென்மராட்சி கல்வி வலயத்தின் கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயத்தின் தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது. தரம் 1 புதிய மாணவர்கள் தரம் 2 மாணவர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டு, மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம் மற்றும் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் கலந்துகொண்டு புதிதாக பாடசாலையில் இணையும்

புளுதியாற்று நீரை திறந்து வட்டக்கச்சி பகுதி விவசாயிகளுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு புளுதியாறு விவசாயிகள் எதிர்ப்பு(காணொளி)

Posted by - January 11, 2017

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வரட்சியையடுத்து கிளிநொச்சி, புளுதியாற்று நீரை திறந்து வட்டக்கச்சி பகுதி விவசாயிகளுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு புளுதியாறு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இரணைமடு குளத்தின் கீழான வட்டக்கச்சி விவசாயிகளுக்கு புளுதியாற்று நீரை திறந்து வழங்குவது தொடர்பாக புளுதியாறு விவசாயிகளுடனான கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் சிஞானம் சிறிதரன் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் என். சுதாகரன் நீர்ப்பாசனப்பொறியியலாளர் செந்துரன் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே புளுதியாறு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதேவேளை நிலவும்

கூட்டமைப்பு எம்.பிக்கள் பதவிகளை துறந்தால் அரசுக்கே சாதகம்! – விக்னேஸ்வரன்

Posted by - January 11, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பதவிகளைத் துறந்தால், அது மத்திய அரசுக்கு மிகப் பெரிய அழுத்தம் கொடுப்பதாக அமையும் தானே என்று வினா தொடுக்கப்பட்டுள்ளது.