மக்கள் தயாரென்றால், அதிகாரத்தை உடனே கைப்பற்றுவேன்- மஹிந்த ராஜபக்ஷ

Posted by - January 12, 2017

மக்கள் தயாரென்றால், அதிகாரத்தை உடனே கைப்பற்றுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டுவிட்டரின் ஊடாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் தயாரென்றால், அதிகாரத்தை உடனே கைப்பற்றுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டமை, தப்பியோடுவதற்கு அல்ல என்று தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் பெற்றுள்ள கடன் அளவின் அடிப்படையில், அபிவிருத்திகள் நாட்டில் முன்னெடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.  

அரியாலை ஆனந்தன் வடலிவீதியிலுள்ள வீடொன்றில் திருட்டு(காணொளி)

Posted by - January 12, 2017

யாழ்ப்பாணம் அரியாலை ஆனந்தன் வடலிவீதியிலுள்ள வீடொன்றில் பெண்கள் தனியாக இருந்த நிலையில் திருடன் வீட்டுக்குள் புகுந்து பெண்ணின் சங்கிலியை அறுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அரியாலை வடலிவீதியில் வசிக்கும் லவேந்திரா என்பரின் வீட்டில் நேற்றிரவு உறங்கிக்கொண்டிருந்த பெண்ணை அச்சுறுத்தி சங்கிலியை பறித்துச்சென்றுள்ளனர். வீட்டில் கணவர் கொழும்பு சென்றுள்ள நிலையில், திருடன் யன்னல் கம்பியை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பெண்ணை அச்சுறுத்தி சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளார். குறித்த அரியாலை வடலிவீதி பகுதியில் தொடர்ந்து அண்மைக்காலமாக களவு இடம்பெற்று வருவதாக

கிளிநொச்சியில் இன்று-தைத்திருநாள் வீதியோட்ட போட்டிகள்(படங்கள்)

Posted by - January 12, 2017

கிளிநொச்சியில் இன்று-தைத்திருநாள் வீதியோட்ட போட்டிகள் நடைபெற்றன. தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு, கிளிநொச்சி மாவட்ட இளைஞர் திறன் விருத்தி கழகம் ஏற்பாடு செய்திருந்த வீதியோட்ட போட்டிகள் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றன. இளைஞர் திறன் விருத்தி கழகத்தின் தலைவர் சுரேன் தலைமையில் இன்று காலை 6.30 மணிக்கு ஆண்களுக்கான வீதியோட்ட போட்டியை இயக்கச்சி சந்தியில் வைத்து, கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்பாசன பணிப்பாளர் சுதாகரன்  கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார். பெண்களுக்கான வீதியோட்ட போட்டியைப் பச்சிலைப்பள்ளி உதவிபிரதேச செயலாளர்

வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் வீதியில் விபத்து(படங்கள்)

Posted by - January 12, 2017

வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று காலை வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மறவன்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன், பின்புறமாக வந்த மற்றுமொரு முச்சக்கரவண்டி மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதிகள் இருவருமே காயமடைந்துள்ளனர்.

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள ஆரம்ப பிரிவு கற்றல் வள நிலையத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது(காணொளி)

Posted by - January 12, 2017

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் 17.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆரம்ப பிரிவு கற்றல் வள நிலையத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. இடைநிலைப் பாடசாலைகளையும் ஆரம்பப் பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக தெரிவு செய்யப்பட பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை செயல் திட்டத்தின் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் ஆரம்பப்பிரிவு கற்றல் வளங்களுக்காக  கட்டடங்கள் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது. இதன் கீழ் கிழக்கு

வவுனியாவில் இருவேறு இடங்களில் விபத்து-பொலிஸாரும், இராணுவத்தினரும் காரணம் (படங்கள்)

Posted by - January 12, 2017

வவுனியா தாண்டிக்குளத்தில் இராணுவ வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு முன்பாக இன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இராணுவ வாகனம் மோதி படுகாயமடைந்த இளைஞன் ஒருவர், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லுரிக்கு முன்பாக, வவுனியா நகரை நோக்கிச் சென்ற இராணுவ வாகனம் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற தாண்டிக்குளம் பகுதியில் உள்ள கராஜ் ஒன்றில் பணிபுரியும் 25 வயதுடைய நிம்புஜோர்ஜ் என்னும்

நாடு மீண்டும் அழிவைநோக்கிச் செல்கின்றது – ஆனந்தசங்கரி எச்சரிக்கை!

Posted by - January 12, 2017

தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நாடு மீண்டுமொரு அழிவைச் சந்திக்கப்போவதாகவும் இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லையெனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வதிவிட வீசா

Posted by - January 12, 2017

இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இரண்டு முதல் ஐந்தாண்டு வரையான வதிவிட வீசா வழங்கப்படும் என்று நிதியமைச்சு கூறியுள்ளது.

கண்டி வைத்தியசாலையின் 65ம் இலக்க அறை மீண்டும் திறக்கப்பட்டது

Posted by - January 12, 2017

ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் பரவியதன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கண்டி பொது வைத்தியசாலையின் 65ம் இலக்க நோயாளர் அறையை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சமன் ரத்ணாயக்க கூறினார்.

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீது இதுவரை விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது

Posted by - January 12, 2017

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீது இதுவரை விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.