மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தைப்பொங்கல்(காணொளி)
தைத்திருநாளை உலகெங்கும் உள்ள இந்துக்கள் சிறப்பாக இன்று கொண்டாடிவருகின்றனர். தைத்திருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்கள் மற்றும் இந்துக்களின் வீடுகளில் இன்று அதிகாலை பொங்கல் படைத்து சூரியனுக்கு நன்றி செலுத்தினர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் பொங்கல் பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றதுடன் வீடுகளிலும் நடைபெற்றன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. ஆலய பரிபாலனசபையினரின் ஏற்பாட்டில் ஆலய முன்றிலில் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. ஆலயத்தின்

