அமைச்சு பதவியை பறித்ததால் விஜயதாஸ ராஜபக்ச பித்தலாட்டம் போடுகிறார்!

Posted by - November 15, 2017

அமைச்சு பதவியை பறித்ததால், அரசமைப்பு பேரவை சட்டவிரோதமானது என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச பித்தலாட்டம் போடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் நிரந்தர கட்டிடம் கோரி கண்டனப் பேரணி

Posted by - November 15, 2017

கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகள் தங்களுக்கு நிரந்தர கட்டடம் அமைத்த தருமாறு கோரி இன்று(15) கண்டனப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனா். இன்று காலை பத்து மணிக்கு சந்தை வளாகத்திலிருந்து ஆரம்பமான கண்டனப் பேரணியானது மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கு அரச அதிபருக்கு தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனா். இது குறித்து வர்த்தகர்கள் கருத்து தெரிவித்த போது கிளிநொச்சி சந்தைக்கு 2011 ஆம் ஆண்டு நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கு 274 மில்லியன் ரூபா நிதி

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது!

Posted by - November 15, 2017

ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த பெண்ணொருவர் பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனார். கொழும்பு மத்திய சட்ட ஒழுங்கு பிரிவு அவரை கைது செய்துள்ளது. அந்த பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று கைது செய்யப்பட்ட குறித்த பெண் 54 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. அவரிடம் இருந்து 6.2 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரை யாழ்ப்பாண கோட்டையில் தங்க வைக்க யோசனை

Posted by - November 15, 2017

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை யாழ்ப்பாணம் கோட்டையில் தங்க வைப்பதற்கான யோசனை ஒன்றை தாம் பிரேரித்துள்ளதாக வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதற்கான யோசனையை, தாம் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்பிவைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாண கோட்டையானது, 1618 ஆம் ஆண்டு போர்த்துகீசர்களால் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மலையகம் போல் மாறிய மட்டக்களப்பு

Posted by - November 15, 2017

மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றும் இல்லாதவாறு இன்று காலை கூடுதலான பனிப்பொழிவு,  இதனால் மட்டு மாவட்டம் எங்கும் மலையகம் போன்று காட்சியளித்துள்ளது.பிரதேசம் எங்கும் பனிக்கூட்டம் காணப்பட்டதனால் ஒருவரை ஒருவர் அடையாளம் காணமுடியாத வகையில் இருண்ட ஒரு பிரதேசமாக காட்சியளித்துள்ளது. இது மலைநாட்டில் நிலவும் காலநிலைக்கு ஒத்ததாக  உள்ளது வரலாற்றில் இவ்வாறானதோர் பனிப்பொழிவை சத்திக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த பனியுடன்கூடிய காலநிலையானது   காலை 8 மணிவரை நீடித்திருந்துள்ளது.  இதன் காரணத்தால்  மாணவர்கள், அரச ஊழியர்கள், விவசாயிகள், கூலிதொழிலாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் பலத்த சிரமத்தை எதிர்நோக்கியிருந்துள்ளனர்.

அனுலா வித்தியாலய அதிபருக்கு திடீர் இடமாற்றம்

Posted by - November 15, 2017

சர்ச்சைகளையடுத்து நுகேகொடை – அனுலா வித்தியாலயத்தின் அதிபர் கல்வி அமைச்சுக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையின் நிர்வாக முறைகேடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளையடுத்தே இந்த இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, நிர்வாகப் பிரச்சினை மற்றும் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளுதல் போன்ற சில விடயங்கள் தொடர்பில், கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிராமத்துக்குள் புகுந்த யானை கூட்டத்தால் மக்கள் அச்சம் : வீடுகள் சேதம்

Posted by - November 15, 2017

வவுனியா, ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்தினுள் புகுந்த யானைக்கூட்டத்தின் அட்டகாசத்தால் வீடு சேதமடைந்துள்ளதுடன் சுமார் 30 தென்னை மரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில்  அண்மைக்காலமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் யானை வேலி அமைக்கப்பட்ட போதிலும் இன்றும் பல கிராமங்கள் யானையின் அச்சுறுத்தலுக்குள்ளாகி

ஏ -9 வீதியில் விபத்து : மாணவன் வைத்தியசாலையில்

Posted by - November 15, 2017

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனைக்கு முன்பாக இன்று மதியம் 2.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவனொருவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து பாடசாலை மாணவனை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளின் மீது வவுனியாவிலிருந்து கண்டி வீதி நோக்கி பயணித்த கார் தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்

152 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற சுங்க அதிகாரிகளுக்கு குற்றப்பத்திரிகை

Posted by - November 15, 2017

152 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் சுங்க அதிகாரிகள் நால்வருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் குறித்த குற்றப்பத்திரிகை இன்று மேல்நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன்னிலையில் கையளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் பிரதிவாதிகள் ஒவ்வொருவரையும் ஒரு இலட்சம் ரூபா பிணை மற்றும் 2 மில்லியன் ரூபா சரீரப்பினையில் விடுவிப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதேவேளை குறித்த நபர்களுக்கு நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு எதிர்வரும்

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - November 15, 2017

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 35 இனால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்பொழுது 75 பேர் உள்ள மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழு 110 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, நீதிமன்றத்தில் குவிந்திருக்கும் நிதி மோசடி வழக்குகள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு விசேட 3 மேல் நீதிமன்றங்கள் நிறுவப்படவுள்ளதாகவும் அதன் மூலம் குறித்த வழக்குகள் தொடர்ச்சியாக விசாரணை செய்யப்படவுள்ளதாகவும் நீதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. வழக்கு கோப்புகளை சுயமாக முகாமைத்துவப்படுத்துவதற்கான திட்டமொன்றை நிறுவுவதற்காக