பொலிஸ் சாரதி ஒருவர் கைது!

Posted by - November 16, 2017

குடும்பப் பெண் ஒருவருடன் உறவுவைத்து வீடொன்றுக்குள் அத்துமீறினார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். “யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் குடும்ப பெண் ஒருவருடன் அவர் தொடர்பு வைத்து வந்துள்ளார். அவர்களின் உறவு தொடர்பில் அந்தப் பெண்ணின் கணவருக்குத் தெரியவந்துள்ளது. அவர் நேற்று இரவு மனைவியிடம் தெரிந்தவற்றைக் கூறியுள்ளார். அதனால் கணவன் – மனைவி இடையே சண்டை மூண்டுள்ளது. அந்தப் பெண் கணவனுக்கு சுடுதண்ணீர் ஊற்றிவிட்டு வீட்டிலிருந்து உறவினர்

ஆனைக்கோட்டை வாள்வெட்டு: மூன்று இளைஞர்கள் இன்று அதிகாலை கைது!

Posted by - November 16, 2017

ஆனைக்கோட்டை வாள்வெட்டு:  மூன்று இளைஞர்கள் இன்று அதிகாலை கைது!நேற்றுக் கைதாகிய மூவரில் இருவர் விடுவிப்பு ஆனைக்கோட்டை லோட்டஸ் வீதியில் நேற்றுமுன்தினம் இரவு வீடொன்றுக்குள் புகுந்து ஒருவரை வெட்டிக் காயப்படுத்தியதுடன், அங்கிருந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இன்று அதிகாலை மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இன்று அதிகாலை இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் கூறினார்.

நளினி முருகனை விடுவிக்க முடியாது என அறிவிப்பு!

Posted by - November 16, 2017

நளினி முருகனை விடுவிக்க முடியாது என்று சென்னை மேல் நீதிமன்றத்தில், தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி முருகன், தம்மை விடுவிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாடு கோரப்பட்டிருந்தது. இந்த மனுவிற்கு எதிராக தமிழக மாநில உள்துறை திணைக்களத்தின் பிரதி செயலாளரால் எதிர்ப்பு கடிதம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக என்.டி.ரீ.வி செய்தி வெளியிட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஜனாதிபதியை சந்திக்க ஜனாதிபதி செயலகத்துக்குள் சென்றுள்ளனர்

Posted by - November 16, 2017

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சற்று முன்னர்  ஜனாதிபதியை சந்திப்பதற்காக  ஜனாதிபதி செயலகத்துக்குள் சென்றுள்ளனர் குறித்த சந்திப்பிற்கு 8 மாவட்டங்களையும் சேர்ந்த பிரிதிநிதிகள் சென்றுள்ளனர் இதுதொடர்பில் கிளிநாச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் கடந்த மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடம் தனியாக சந்திப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறித்த சந்திப்பின்போது பொருத்தமான திகதி அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அதன்பிரகாரம் இன்று  நண்பகல் ஜனாதிபதியுடனான சந்திப்பினை ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்திருந்தது குறித்த சந்திப்பிற்காக தாம் செல்லவுள்ளதாகவும், குறித்த

டீ.கே.பி. தஸ­நா­யக்­கவை உடன் சிறைச்­சா­லைக்கு மாற்­றவும்-கோட்டை பிர­தான நீதிவான்

Posted by - November 16, 2017

தெஹி­வளை பகு­தியில் வைத்து கடந்த 2008.09.17 அன்று கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றியல் உத்­த­ரவின் கீழ், கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெற்று வரும் கடற்­படையின் முன்னாள் ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் டீ.கே.பி. தஸ­நா­யக்­கவை உட­ன­டி­யாக சிறைச்­சா­லைக்கு மாற்­று­மாறு நீதி­மன்றம் நேற்று உத்­த­ரவு பிறப்­பித்­தது. கோட்டை பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன இந்த உத்­த­ரவை நேற்று பிறப்­பித்தார். சிறைச்­சா­லைகள் ஆணை­யா­ள­ருக்கு பிறப்­பித்த குறித்த உத்­த­ரவில்,

தேர்­தல் ஆணைக்­கு­ழுவின் முக்கிய கூட்டம் இன்று

Posted by - November 16, 2017

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்குத் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்ள உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அடங்­கிய வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில் தேர்தல் தினம் குறித்து தீர்­மானம் எடுக்க இன்று சுயா­தீன தேர்தல் ஆணைக்­குழு கூடு­கின்­றது. இன்று  வியா­ழக்­கி­ழமை கூட­வுள்ள சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு  தேர்தல் குறித்த திக­தியை உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக அறி­விக்க உள்­ளது. இதே­வேளை எதிர்­வரும் ஜன­வரி மாதம் 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திக­திக்­குள்­ளான திக­தியில் உள்­ளு­ராட்­சி­மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு எதிர்­பார்ப்­ப­தாக அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்­தது. வெளி­யி­டப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் குறித்த வர்த்­த­மா­னியில்

வழக்குகளை விரைவாக முடிப்பதைக் கண்காணிக்க விசேட சபை

Posted by - November 16, 2017

நிதி மோசடி உள்ளிட்ட சட்ட ஒழுங்கு முறைகேடுகளை ஆராயும் அமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்துக் கண்காணிப்பதற்காக ‘வளர்ச்சி அளவீட்டுச் சபை’ ஒன்றை நிறுவ ஐ.தே.க. செயற்குழு நேற்று (15) தீர்மானித்துள்ளது. ஐ.தே.க. செயற்குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் பேரில் நேற்று (15) நடைபெற்றது. இதன்போது, சட்ட ஒழுங்கு ஆய்வு நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. நிதி மோசடி விசாரணைக் குழு இதுவரை 92 வழக்குகளை விசாரித்து சட்டமா அதிபரிடம் அறிக்கைகள் சமர்ப்பித்திருப்பதாகவும் அவற்றில் 11

தமிழக மீனவர்கள் பத்து பேர் கைது

Posted by - November 16, 2017

தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து படகு எண் 885இல் மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் பத்துப் பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் பயணித்த விசைப்படகு ஒன்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேற்படி மீனவர்கள் நெடுந்தீவுக்கு வடகிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போதே கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்ததாகவும் மீனவர்கள் மீது கடற்படையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ஒரேயடியாக அனைத்தையும் செய்ய முடியாது- இலங்கை அமைச்சர் ஜெனீவாவில் உரை

Posted by - November 16, 2017

இலங்கை போன்ற ஜனநாயக நாட்டில் மனித உரிமைக்கான நடவடிக்கைகள் அனைத்தையும் ஒரேயடியாக நிறைவேற்றிவிட முடியாதுள்ளது என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷத சில்வா தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் அமர்வின் மூன்றாவது சுற்றில் கலந்துகொண்டு இலங்கை நிலவரம் தொடர்பில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். சவால்கள் இல்லாத நாடுகளே இல்லை. எந்தவொரு நாட்டிலும் அந்நாட்டுச் சட்டங்கள் முழுமையாக அமுல் ஆவதில்லை.

JVP ,UNP கட்சி உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைவு

Posted by - November 16, 2017

மக்கள் விடுதலை முன்னணியின் கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திமுது அபேகோன் உள்ளிட்ட கண்டி மாநகர சபை மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்துகொண்டனர். கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று அவர்களைச் சந்தித்தார். ஜனாதிபதி நாட்டுக்காக முன்னெடுத்திருக்கும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர்கள் இதன்போது தெரிவித்தனர். மத்திய மாகான முதலமைச்சர் திலின பண்டார தென்னகோனுடன் வருகை