மிலேனியம் சவால் – வடக்கில் ஆய்வு

Posted by - January 28, 2017

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலீடுகள் மற்றும் வர்த்தக முயற்சிகள், வேலைவாய்ப்புகள் தொடர்பாக அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதிய உயர் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். மிலேனியம் சவால் நிதியத்தின் மூலம் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளன. கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை மற்றும் பழங்கள் பதனிடும் மையம் ஆகியவற்றுக்குச் சென்று முதலீடுகள், வர்த்தக முயற்சிகள், வேலை வாய்ப்புகள் குறித்த நிலைமைகளை இந்தக் குழுவினர் ஆய்வு செய்தனர். மிலேனியம் சவால் நிதியத்தின் ஊடாக, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் போரினால்

சிரிய அகதிகளை தடுக்க ட்ரம்ப் உத்தரவு

Posted by - January 28, 2017

இஸ்லாமிய தீவிரவாதிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க நிறைவேற்று அதிகாரம் அளிக்கும் புதிய உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார். அமெரிக்க இராணுவ அமைச்சராக ஜேம்ஸ் மாட்டிஸ் இராணுவ தலைமையகமான பென்ட்டகன் நேற்று பதவி ஏற்று கொண்டார். இந்த நிகழ்வின் குறித்த உத்தரவில் ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளார். 2017ஆம் ஆண்டில் அமெரிக்கா ஏற்கக்கூடிய அகதிகளின் எண்ணிக்கையை 50 ஆயிரமாக அவர் குறைந்துள்ளார். தமது நிர்வாகம் சிறந்த முறையில் கண்காணிப்பு நடைமுறைகளை கடுமையாக்கும்வரை, சிரியா அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய

வரண்ட காலநிலை மீண்டும் தொடரும்

Posted by - January 28, 2017

நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்து வரும் சில நாட்களில் குறைவடையலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இந்த நிலையில், மார்ச் மாதம் இறுதிவரை வட்சியுடனான காலநிலை மீண்டும் நிலவும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அடுத்துவரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றம் வடமத்திய மாகாணங்களில் ஓரளவு மழையுடன் கூடிய காலநிலை காணப்படும். ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் இடியுடன்கூடிய மழை பெய்யலாம் காலநிலை அவதான நிலையம்

சுயநலத்திற்காக பொதுமக்களை பயன்படுத்த வேண்டாம் – துமிந்த திஸாநாயக்க

Posted by - January 28, 2017

அரசியல்வாதிகள் தமது நலன்கருதி பொதுமக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் தமது நலனுக்காக பொதுமக்களை பயன்படுத்தும் நிலைமையை தற்போது காணக்கூடியதாக உள்ளது. இதனூடாக மக்களை துன்பத்தில் ஆழ்த்துகின்றனர். தலைவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது சரியல்ல என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.

அடுத்தவாரம் முதல் அரிசி விலை குறைப்பு

Posted by - January 28, 2017

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலையை அடுத்தவாரம் முதல் 10 ரூபாவால் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை அடுத்த வாரம் முதல் சந்தையில் கொள்வனவு செய்ய முடியும். மொத்தவிலை 10 ரூபாவாக குறைக்கப்படுகின்ற நிலையில், அதற்கு ஏற்றவாறு சில்லறை விலையும் குறைக்கப்படும். சந்தையில் விநியோகம் அதிகரிக்கும்போது அரிசியின் விலை மேலும் குறையும் என்று அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கத்தின் தலைவர் நிஹால்

ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - January 28, 2017

புகலிடம் கோரிவந்த ஈழத் தமிழரையும், அவரின் குடுபத்தினரையும் திருப்பியனுப்பிமைக்காக ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுவிட்சர்லாந்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ளது. குறித்த ஈழத் தமிழருக்கு 30 ஆயிரம் யூரோக்களை அதாவது 48 இலட்சம் இலங்கை ரூபாவை நட்டஈடாக வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவர்கள் திருப்பியனுப்பப்பட்டதை மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய பிரகடனத்தை மீறியதாக கருதிய நீதிமன்றம், வழக்காடல் கட்டணமாக மேலும், 4 ஆயிரத்து 770 யூரோக்களை அதாவது 7 இலட்சத்து 60 ஆயிரம்

இலங்கையில் ஊழல் அதிகரிப்பு

Posted by - January 28, 2017

2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016ஆம் ஆண்டில் இலங்கையில் ஊழல் அதிகரித்துள்ளதாக புதிய புள்ளி விபரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள, உலக ஊழல் தரவு பட்டியலுக்கு அமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. 2015 ஆம் ஆண்டில் உலக ஊழல் தரவவு பட்டியலில் 167 நாடுகளுக்குள் இலங்கைக்கு 83வது இடம் கிடைத்துள்ளது. எனினும், 2016 ஆண்டில் 175 நாடுகளுக்குள் இலங்கைக்கு 95வது இடம் கிடைத்துள்ளது. இதேவேளை, 2015இல் 76 ஆவது இடத்திலிருந்த இந்தியா,

ஹிக்கடுவையில் இந்தியப் பிரஜை பலி

Posted by - January 28, 2017

ஹிக்கடுவைக் கடலில் குளிக்கச் சென்ற இந்தியப் பிரஜையொருவர், நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக, காவல்துறை தலைமையகம் தெரிவித்தது. நேற்றுப் பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 29 வயதுடைய லக்ஷ்மன் ராவன் என்பரே பலியாகியுள்ளதாக, காவல்துறை தலைமையகம் தெரிவித்தது. நீரில் மூழ்கிய நிலையில் அவரை மீட்டு, கராபிடிய வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி அவர் பலியாகியுள்ளதாகவும் இது குறித்த மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்தது.  

மத்திய வங்கி தாக்குதல்: 21 வருடங்களாக வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை

Posted by - January 28, 2017

இலங்கை மத்திய வங்கி தாக்கப்பட்டு எதிர்வரும் 31ம் திகதியுடன் 21 வருடங்கள் பூர்த்தியடைவதாகவும், எனினும் இதன்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அன்று முதல் இன்று வரையுள்ள அரசாங்கங்கள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வாக்குறுதிக்கமைய புதிய அம்பியூலன்ஸ்

Posted by - January 28, 2017

கொட்டகலை பிரதேச மக்களின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய அம்பியூலன்ஸ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களினால் பொறுப்பேற்கப்பட்ட புதிய அம்பியூலன்ஸ், கொட்டகலை வைத்திசாலைக்கு இன்று கையளிக்கப்பட்டது. கடந்த 21ஆம் திகதி, தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டர், வானிலை சீர்கேட்டினால் கொட்டகலை காங்கிரஸ் தொழிற்பயிற்சி நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதன்போது, ஜனாதிபதியின் வருகையை அறிந்த கொட்டகலை பிரதேச மக்கள், தமது குறைபாடுகளை ஜானாதிபதியிடம் தெரிவித்தனர். கொட்டகலை வைத்தியசாலைக்குப் புதிய அம்பியூலன்ஸ் வண்டியை